சென்னை: ரா.வெங்கட் இயக்கத்தில் மறைந்த நடிகர் பூ ராமு மற்றும் காளி வெங்கட் நடித்து தீபாவளியை ஒட்டி வெளியான திரைப்படம், கிடா. இந்த படம் குறித்து பிரபல சினிமா பின் தொடர்பாளர் பேஸ்புக்கில் படத்தின் விமர்சனத்தை பதிவிட்டு உள்ளார். இதனை மறுபதிவாக பதிவிட்ட இயக்குநர் ரா.வென்கட், “இந்த படத்திற்கான புரோமோஷனே. இந்த மாதிரியான ரிவியூ தான். மகிழ்ச்சி. பெரிய மூன்று படங்களுக்கு நடுவே. எங்களின் கிடா களத்தில் நிற்பதே ஆச்சரியம். நண்பர்கள் முடிந்த அளவு தியேட்டரில் சென்று பாருங்கள். எல்லா ஊரிலும் படம் ரிலீஸ் ஆகல. இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறது எல்லாரிடமும் போய் சேரும்" என்று பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் நேற்று பேஸ்புக்கில் மீண்டும், ‘இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள். கூடவே ஒரு எட்டு பேரும் கிடா எடுக்க வந்திருக்கிறார்கள் ஆனால் தியேட்டர் நிர்வாகம் பதினைந்து பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள்.
நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தான நாங்களே இன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல. ஷோ கேன்சல். எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல. நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ஆனா ஷோ கேன்சல். இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்லவர்றது தெரியுது. ஆனா ஆதங்கத்த எங்க கொட்டுறது. அதான் இத ஷேர் பண்ணுனேன். மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். நன்றி” என இயக்குநர் தனது ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:போலீசாக கீர்த்தி சுரேஷ்.. ஜெயில் கைதியாக ஜெயம் ரவி.. சஸ்பென்ஸ் நிறைந்த 'சைரன்' படத்தின் டீஸர்!