ETV Bharat / entertainment

'பாரதியார் கெட்டப்பில் தனுஷ்..!' : 'வாத்தி' டீஸர் வெளியீடு

author img

By

Published : Jul 28, 2022, 7:05 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் 'வாத்தி' படத்தின் டீஸர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

'பாரதியார் கெட்டப்பில் தனுஷ்..!' : ’வாத்தி’ டீசர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் வெங்கி அதுல்ரி இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் தான் ‘வாத்தி’. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் இந்தப் படம் ‘சார்’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷின் பிறந்த நாளான இன்று(ஜூலை 28), இந்தப் படத்தின் டீஸரை அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் பள்ளி ஆசிரியராக வரும் தனுஷ், கல்வி வியாபாரத்திற்குள் சிக்கியதை எதிர்த்துக்கேள்வி கேட்கும் நாயகராய் திகழ்வார் என இந்த டீஸரில் தெரிகிறது.

மேலும், தனுஷின் பிரபலமான ’ஃபிளையிங் கிக்’ இடம்பெறும் சண்டைக் காட்சிகள் இந்த டீஸரில் இடம்பெற்றிருந்தது. தனுஷின் கமர்சியல் ஆக்‌ஷன் படங்கள் வரிசையில் ஓர் முக்கியப் படமாக இது திகழுமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டீஸரின் இறுதியில் 'பாரதியார் கெட்டப்பில்' தனுஷ் சண்டையிடுவது போல் ஓர் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடிகர் விஜய் தனது பாடலின் ஓர் ஷாட்டில் பாரதியார் கெட்டப்பில் வருவார். அதற்கு பின்பு தற்போது தனுஷ் அந்த கெட்டப்பில் வருவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கணவருக்கு நடிகை பிரனிதா பாத பூஜை: ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.