ETV Bharat / entertainment

ஜூலையில் வெளியாகிறது இரவின் நிழல்...! - iravin Nizhal release date

இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் உலகின் முதல் non- linear சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் திரைப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகவுள்ளது என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

ஜூலை வெளியாகிறது இரவின் நிழல்....
ஜூலை வெளியாகிறது இரவின் நிழல்....
author img

By

Published : Jun 27, 2022, 10:36 PM IST

வித்தியாசமான கதைக் களங்களோடு தனக்கே உரித்தான பாணியில் சினிமா எடுப்பதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனித்துவமானவர். அவர் உருவாக்கிய 'ஒத்த செருப்பு' ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட புதிய முயற்சியாக அமைந்தது.

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இரவின் நிழல்' திரைப்படத்திலும், வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் 'இரவின் நிழல்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது எனும் அறிவிப்பை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். உலகின் முதல் non- linear சிங்கிள் ஷாட் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

இதையும் படிங்க: 25 years of suryavamsam- நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது சிறகை விரித்து பறப்போம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.