நடிகர் தனுஷ், மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் மூலம் பிரபலமான ரூஸோ பிரதர்ஸ் (ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ) இயக்கும் 'தி க்ரே மேன்' என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்தப் படத்தின் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் இப்படத்தின் பிரமோஷன் வேலைகள் நடைபெற தொடங்கிவிட்டன, இதன்படி அப்படத்தின் இயக்குனர்கள் இந்தியா வரவுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று அமேரிக்காவில் ’தி க்ரே மேன்’ படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் மற்றும் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள், என அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்கள் இப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து கேட்ட போது, ”நான் எப்படி இந்த படத்தில் நடிக்க வந்தேன் என்றே தெரியவில்லை”, என கூறினார். இந்த பதில் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை கிளப்பியது.
பின்னர் தொடர்ந்து பேசிய தனுஷ் "முதலில் ஒரு காஸ்டிங் ஏஜென்சி தன்னை தொடர்பு கொண்டு ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டனர், அதற்கு நான் ”சரி என்ன படம்” என்று கேட்டேன், அவர்கள் பெரிய படம் என பதில் கூறினர்.
பின் மீண்டும் நான் அவர்களிடம், என்ன பெரிய படம் யாரது படம் என கேட்டேன், அதற்கும் அவர்கள் பெரிய படம் நீங்கள் அதில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்றனர், நான் நடிக்க மாட்டேன் என கூறினேன். அதன் பிறகே அவர்கள் ரூஸோ பிரதர்ஸ் குறித்து கூறினர்.
பின்னர் தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய படம் என்று. இந்த படம் நான் மேலும் நிறைய கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன், நான் ரூஸோ பிரதர்ஸின் மிகப்பெரிய ரசிகன்", என கூறினார்.
இதையும் படிங்க: தனுஷ் நடித்துள்ள ’தி க்ரே மேன்’ படத்தின் அனல் பறக்கும் சண்டை காட்சிகள் வெளியானது!!