ETV Bharat / entertainment

மிரட்டும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! - kollywood

அருள்நிதி நடிப்பில் 'டிமான்டி காலனி 2' (Demonte Colony 2) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது

மிரட்டும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

author img

By

Published : Aug 3, 2023, 8:24 PM IST

சென்னை: இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து 2015ம்‌ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. ஹாரர் படங்களில் வித்தியாசமான மேக்கிங்கில் கலக்கியது இப்படம். ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி, அனைவரையும் இருக்கை நுனியில் கட்டிப்போட்டு பயமுறுத்திய திரைப்படம் “டிமான்ட்டி காலனி”. 8 வருடங்களுக்குப் பிறகு 'டிமான்ட்டி காலனி 2' என்ற பெயரில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் தற்பொழுது தயாராகி உள்ளது.

இந்த இரண்டாம் பாகம் முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ளது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில், சிறப்பான VFX காட்சிகளுடன் இப்படம் உருவாகியுள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மோசடியில் ஈடுபட்ட ராஜ் கமல் பிலிம்ஸ்? - இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியப் பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், RC ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

முழுப்படத்தின் தயாரிப்பு முடியும் முன்னதாக படத்தின் முழு உரிமையையும் BTG Universal நிறுவனம் சார்பில் பெற்று, பாபி பாலச்சந்திரன் இப்படத்தின் தயாரிப்பாளராக மாறியுள்ளார். மேலும் படத்தின் முழு வெளியீட்டையும் BTG Universal நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது என படக்குழு தெரிவித்தது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் டீசர், இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில், மிக வித்தியாசமாக அமைந்திருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? இயக்குநர் பேரரசு கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.