ETV Bharat / entertainment

'வருசா வருசம் சம்பவமா வருதே' - திருடு போன பைக்கால் நொந்து போன 'குக் வித் கோமாளி' மணிமேகலை - Cooku With Comali Fame Manimegalai Bike robbed in Chennai

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தங்களுடைய விலை உயர்ந்த ரேஸ் பைக் திருட்டு போயுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி மணிமேகலை
குக் வித் கோமாளி மணிமேகலை
author img

By

Published : Apr 18, 2022, 4:43 PM IST

சென்னை: தலைநகர் சென்னையின் நகர் பகுதி, புறநகர் பகுதி என அனைத்து இடங்களிலும் சமீப காலமாக இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியான மணிமேகலைக்கு சொந்தமான கேடிஎம் பைக் நேற்று (ஏப். 17) அதிகாலை திருடுபோய் உள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இன்று (அதாவது நேற்று) அதிகாலை, சென்னை அசோக் நகரில் உள்ள நண்பரின் வீடு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த எங்கள் பைக் திருடு போய்விட்டது. கல்யாணத்திற்கு பிறகு, கடினமாக உழைத்து வாங்கிய முதல் பைக். வருத்தமாக உள்ளது" எனக் குறிப்பிட்டு, வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ! என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

குக் வித் கோமாளி மணிமேகலை
ஹூசைன் - மணிமேகலை

மேலும், அந்த பைக், கேடிஎம் ஆர்சி 200 மாடல் என்றும், பதிவு எண் TN 10 BJ 4700 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பைக்கை கண்டுபிடிக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு விரைவாக தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் மணிமேகலை அதில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த மணிமேகலை, தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பராகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்கள் மனம் கவர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டு வருகிறார்.

குக் வித் கோமாளி மணிமேகலை
பிரபல தொகுப்பாளினி மணிமேகலை

இவருக்கும், திரைப்பட நடன உதவியாளரான ஹூசைன் என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணமானது. சமூக வலைதளங்களில் பிரபலமான இந்த தம்பதியினர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும், இந்த தம்பதியினர் 'ஹூசைன் மணிமேகலை' என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியை சம்மதிக்க வைத்த யுவனின் அந்த ஒரு வார்த்தை..! மாமனிதன் இசை வெளியீட்டு விழா...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.