ETV Bharat / entertainment

விக்ரமின் 'கோப்ரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு! - The Cobra movie is produced by Seventh Screen Studios

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கோப்ரா ரிலீஸ் தேதி அறிவிப்பு...!குஷியான விக்ரம் ரசிகர்கள்

author img

By

Published : May 20, 2022, 11:02 PM IST

சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படம் 'கோப்ரா'. இத்திரைப்படத்தை ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் சஸ்பென்ஸ், சைக்காலஜிக்கல் த்ரில்லர் பட பாணியில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம் ஏழு வேடங்களில் நடித்துள்ளார்.

கே.ஜி.எஃப். ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிக்குமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கோப்ரா திரைப்படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் இந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் தயாரிப்பு வேலைகள் திட்டமிட்டபடி முடிவடையாததால் படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழுனர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'கோப்ரா’ திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.