ETV Bharat / entertainment

'வானமே எல்லை' சூர்யாவை வாழ்த்திய ஸ்டாலின்!

author img

By

Published : Jun 29, 2022, 3:21 PM IST

ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக நடிகர் சூர்யாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு கொடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”வானமே எல்லை” சூர்யாவை வாழ்த்திய ஸ்டாலின்

அமெரிக்காவில் வழங்கப்படும் ’அகாடமி விருது’ எனப்படும் ’ஆஸ்கர் விருது’ உலக திரைத்துறையில் வழங்கப்படும் புகழ்பெற்ற விருதாகும். கடந்த ஆண்டு சூர்யாவின் ’சூரரைப்போற்று’ ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னால் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்தியப்படமாக ’சூரரைப் போற்று’ இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்புவிடுத்துள்ளது. ’ஆஸ்கர் அகாடமி’ உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து நடிகர் சூர்யாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

    வானமே எல்லை!

    — M.K.Stalin (@mkstalin) June 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் சூர்யாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, தி அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’விக்ரம்... விக்ரம்... நான் வெற்றி பெற்றவன்’ - ஜூலை 8 இல் ஒடிடியில் வெளியாகிறது விக்ரம்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.