ETV Bharat / entertainment

'நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ்' - எஸ்.ஜே. சூர்யா - charlie 777

'777 சார்லி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ்

author img

By

Published : May 31, 2022, 3:03 PM IST

'சார்லி' என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படம் '777 சார்லி'. அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

777 சார்லி
777 சார்லி

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சக்தி ஃபிலிம்ஸ் நிறுவனர் சக்தி வேலன் கூறியதாவது, 'கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை எனக்கு போட்டுக்காட்டி, இதை வெளியிட வேண்டும் என்றார். இந்தப் படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்தப் படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது’ என்றார்.

பிரபல கன்னட இயக்குநர் ராஜ் பி ஷெட்டி கூறியதாவது, ’இந்தப் படத்தில் கால்நடை மருத்துவராக நடித்துள்ளேன். நான் கூட இந்தப் படம் எடுக்க முன்வரமாட்டேன். இந்தப் படம் அத்தனை கடினமானது. நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும். இயக்குநர் கிரண்ராஜ், ரக்‌ஷித் ஷெட்டி அவர்களுக்கு நன்றி. படத்தை வெளியிடும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி’ என்றார்.

படத்தின் இயக்குநர் கிரண்ராஜ் கூறியதாவது, ’நான் செல்லப்பிராணி ஆர்வலர். அதனால் தான் இந்தக் கதையை தேர்ந்தெடுத்தேன். இந்தப் படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் எனத் தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்தப் படத்தை தொடங்கினோம். ரக்‌ஷித் ஷெட்டி கதையைக் கேட்டு, நாம் கண்டிப்பாக இந்த படத்தை செய்வோம் எனக் கூறினார். பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் கதையை உருவாக்கு என ரக்‌ஷித் ஊக்கமளித்தார். கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்த படத்தை கொடுக்க வேண்டும் என விரும்பினோம்.

பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிக திறமையானவர்கள். இந்தப் படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள். நேரடி தமிழ் படம் என்று கூறுவீர்கள். இந்தப் படத்தில் நடித்த நாய்(சார்லி)யை தேர்ந்தெடுக்க நாங்கள் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தோம். பின்னர் பல நாள் கழித்து இந்த நாயைக் கண்டுபிடித்தோம். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி’ என்றார்.

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது, ’கரோனாவிற்குப் பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியைப் பார்த்தேன். இந்த படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. நான் இந்தப் படத்தை தமிழில் வெளியிட வேண்டும். அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுத்த படம். இயக்குநர் கிரண்ராஜுக்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இறைவி படத்தின் நாய் காட்சியினை எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் எனத்தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை நிச்சயமாக கூறப்பட வேண்டிய கதை. இந்தப் படம் பார்த்த பின்னர் வாழ்கை மேல் ஒரு நம்பிக்கை வரும்’ என்றார்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா கூறியதாவது, ’நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றிய நாயானது, படக்குழு மற்றும் இயக்குநருடன் வாழ்ந்து இருக்கிறது. இயக்குநர் உடைய ஆர்வம் தான் இந்தப் படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன். ஆனால், இந்தியாவின் பல இடங்களில் படத்தைப் பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய்போல் நடித்துள்ளது. படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது. 777 சார்லி ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். ஸ்டோன் பெஞ்ச் மூலமாக இந்தப் படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் நல்ல படங்களை தவறவிடமாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் 777 சார்லி-க்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி’ என்றார்.

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி கூறியதாவது, ’இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு. சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது. 1 1/2 வருடத்திற்கு முன்னரே படம் முடிந்துவிட்டது. நான் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன். படத்தை பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது. ஒட்டுமொத்த குழுவும் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் முதலில் இணைந்த நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச். ஸ்டோன் பெஞ்ச் எப்பொழுதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள். நன்றி’ என்றார்.

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 777 சார்லி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க: 'விவேக் என்றும் என் நினைவில் இருப்பார்' - லெஜண்ட் சரவணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.