மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்தார். அதனடிப்படையில் சிபிஐ விசாரணையை தொடங்கியது. இவரது தற்கொலைக்கு முன்னதாக அவரிடம் மேலாளராக பணிபுரிந்த திஷா சலியன் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
இதனால் 2 உயிரிழப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சர்ச்சைகள் கிளம்பின. இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழப்பு தற்கொலையே கொலை அல்ல என்று சிபிஐ அறிவித்தது. அதைத்தொடர்ந்து திஷா சலியன் உயிரிழப்பு வழக்கு மட்டும் தொடர்ந்தது. இந்த நிலையில் திஷா சலியன் உயிரிழப்பு விபத்தால் மட்டுமே ஏற்பட்டது. கொலையே, தற்கொலையோ அல்ல என்று சிபிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தரப்பில், திஷா சலியனுக்கு நிதி சிக்கல் இருந்தது உண்மையே. இருப்பினும், இதற்காக அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரது உயிரிழப்பு விபத்தால் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: என்னை துண்டு துண்டுடாக வெட்டப்போவதாக மிரட்டினார்... ஷ்ரத்தாவின் புகார் கடிதம்...