ETV Bharat / entertainment

BB Day 9: எனக்கு Girlfriends கிடையாது...! கோளாறாக வேலை செய்கிறாரா அசல் கோளாறு...? - ஜிபி முத்து ஆர்மி

பிக் பாஸ் 6ஆவது சீசனின் ஒன்பதாம் நாளில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை காணலாம்.

BB Day: 9 ; ’எனக்கு Girlfriends கிடையாது...!’ ; கோளாறாக வேலை செய்கிறாரா அசல் கோளாறு...?

author img

By

Published : Oct 19, 2022, 11:18 AM IST

Updated : Oct 19, 2022, 11:24 AM IST

வழக்கமாக பிக் பாஸ் சீசன்களில் 34ஆவது நாள்களிலேயே சண்டை, வேகம், போட்டி, பொறாமை எல்லாம் ஆரம்பிக்கும். ஆனால் இந்த 6ஆவது சீசனில் முதல் வாரத்திலேயே இதெல்லாம் தொடங்கிவிட்டது. அப்படி விறுவிறுப்பா ஆரம்பித்த இந்த சீசன் சென்ற வாரம் நம்ம ஆண்டவரோட பாராட்டுகளோட தொடர்ந்துட்டு இருக்கு. கேப்டன் டாஸ்க்கான்ன கடிகாரம் போல் நிற்கும் டாஸ்க்கில் ’பிக் பாஸே சொன்னா தான் இறங்குவேன்...!’ என்று சொல்லி நம்ம தலைவர் ஜிபி முத்து கேப்டனும் ஆகிட்டாரு. நாமினேஷன்ல பல பேர் விக்ரமனை நாமினேட் செய்தார்கள். அவர் முறைப்பா இருக்குறதும், எல்லா விஷயங்களிலும் ’Political Correctness’ பாக்குறதும் பல போட்டியாளர்களுக்கு அந்நியமாகத் தெரியலாம். ஆனால், விக்ரமனை பார்க்கும்போது நமக்கு ஆரி நியாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை என்கின்றர் சிலர். அவர் இப்படியே தொடர்ந்தார் என்றால் ஆரி போலவே இவருக்கும் மக்களிடம் ஆதரவு கிடைக்க வாய்ப்புண்டு என்பது அவரது ரசிகர்கள் கருத்து.

8ஆம் நாள் எபிசோட் அசல் கோளாறு, நிவா கூட ஸ்விம்மிங் பூல் கிட்ட படுத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருந்ததோட முடிஞ்சது. நம்ம கோளாறு, கோளாறா.., ’எனக்கு Girl friends கிடையாது. நான் Love பண்ணதே இல்லை...!’ என்று மணிரத்னம் படத்தில் வருவது போல கட் செய்து பேசி நிவாவிற்கு வலைவீசுவதாகத் தெரிந்தது. ஏற்கனவே குட்யின்சிடம் சில சேட்டைகள் செய்து வந்த நமது கோளாறின் பார்வை தற்போது நிவாவையும் தொடர்ந்துள்ளது.

அன்றைய நாளில் இது தான் நெட்டிசன்கள் மத்தியில் பெரும்வாரியாக பேசப்பட்டது. சரி.., இன்றைய எபிசோடுக்கு(Day:9) வருவோம். 8ஆம் நாளிலில் விட்டதிலிருந்து தொடங்கியது இன்றைய எபிசோட். கட் பண்ணா நம்ம அஜீம் ஒரு பக்கம் குயின்சி கிட்ட ‘we have to stand like a pair...!' அப்படி என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

அவர் இன்னும் குயின்சியோட டூயட் கனவுல இருந்து வெளியில் வரவில்லை போலும். அப்புறம் இங்க இருந்து வெளியே போனதும், இவரையும் குயின்சியையும் பல படத்துல ஜோடியா கூப்டுவாங்க என்றெல்லாம் அதீத நம்பிக்கையில் இருக்கிறார். பாவம் இதற்கு முந்தைய சீசன்லாம் பார்த்ததில்லை போலும்.

அப்படியே கட் பண்ணா நம்ம கோளாறு, நாளைக்கு நடக்க இருக்குற டான்ஸ் டாஸ்க்காக நிவாவை உட்வேகப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அதோடு அன்றைய நாள் நிறைவடைய ஆரம்பித்தது ஒன்பதாம் நாள். டான்ஸ் டாஸ்கோட முதல் போட்டியாளர்களா நம்ம ஜிபி முத்துவும், ஏடிகேவும் மோதினார்கள்.

நேற்று அறிவிக்கப்பட்ட இந்த டாஸ்க் படி , இரண்டு பேர் நடனமாட வேண்டும் , அதில் யார் சிறந்தவர் என போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதில், பெரும்வாரியான போட்டியாளர்களும் ஜிபிமுத்துவிற்கே ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய, ஏடிகே சற்று காண்டானார்.

அவர் காண்டானது அஜீம் சொன்ன காரணத்தால் தான். இவர்கள் இருவருக்கும் அதைத் தாண்டிய எதுவும் மனஸ்தாபங்கள் இருந்ததா என்பது 24 மணி ஷோ பார்த்தால் தெரியலாம். ஆனால், அஜீம் மீது கொஞ்சம் கோபம் கொண்டார் ஏடிகே. இந்தக் கோபம் பிக் பாஸ் வீட்டில் எப்போது வெடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும், அஜீமிற்கு இங்கு சிலர் கேங் சேருவது பிடிக்கவில்லை அல்லது, தன்னை சேர்த்துக்கொள்ளாததால் கோபம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். அதற்கு பிறகு ’கதை சொல்லவா..?’ டாஸ்க் தொடங்கியது. இந்த டாஸ்க்கின் விதிமுறை படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் டாஸ்க் ரூமிற்குள் சென்று ஒரு கதை சொல்ல வேண்டும். யார் கதை நிராகரிக்கப்பட வேண்டுமோ அவரது கதையை போட்டியாளர்கள் ஒரு நிமிடத்திற்குள் பஸரை அழுத்தி நிராகரிக்கலாம்.

மூன்று நிராகரிப்புகளை ஒரு கதை பெற்றால், அந்தக் கதை சொல்பவர் தன் கதையைத் தொடர முடியாது. அதன்படி முதலில் தன் கதையை ஆரம்பித்த அஜீமின் கதை அரை நிமிடம் கூட நீடிக்கவில்லை. இதனால் சற்று உடைந்தும் போனார் அஜீம். அதன் பின் பேசிய நிவாவின் கதை அனைவரையும் கவர்ந்ததையடுத்து யாரும் அவரது கதையை நிராகரிக்கவில்லை. இதன்மூலம் அடுத்த வார எலிமினேஷனிலிருந்து ஃப்ரீ சோனுக்கு போகும் முதல் போட்டியாளர் ஆனார் நிவா.

அதற்குப் பிறகு பேசவிருந்த ஜனனியின் கதையை முன்கூட்டியே தான் நிராகரிக்கப் போவதாக தனலட்சுமி கூறினார். சற்று வன்மங்களும் இருந்துவிட்டு போகட்டுமே...!. இதைக் கேட்ட மணிகண்டன், தனலட்சுமியிடம் ‘நீ செய்வது தவற’ என விவாதத்திற்கு வர.., ‘மொதல வேலைய பாருங்கலே...!’ என நம் தலைவரும் கேப்டனுமான ஜிபி முத்து வந்து முடித்து வைத்தார்.

பின் கதை சொல்ல வந்த ஜனனியின் கதையும் சொன்னபடியே விக்ரமன், தனலட்சுமி, அயிஷாவால் நிராகரிக்கப்பட்டது. அதனால் மிகவும் உடைந்த ஜனனி வெளியே வந்து அழுததுடன், பெட்ரூம் சென்றும் கொஞ்சம் அழுதுதீர்த்தார். ஒரு நிமிடம்.., ஜனனி ஆர்மி அன்பர்கள் கைகுட்டைக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்..!.

சரி தற்போது எபிசோடுக்கு வருவோம், தற்போது கதையை நிராகரித்தவர்களின் பெயர்களையெல்லாம் வைத்து வீட்டுல லேசாக சில டீம் ஃபார்மேஷன் ஆகுவதாகத் தெரிகிறதுல...?. எத்தனை டீமோ ஆகட்டும், ஆனால் அன்பு கேங் ஆகாமல் இருந்தால் சரி.

அதன்பின் தனலட்சுமி VS மணிகண்டா நடன மோதல் டாஸ்கில் போட்டியாளர்கள் தனலட்சுமியைத் தேர்வு செய்ய, கதை சொல்லவா டாஸ்கில் தனலட்சுமி சொன்ன கதையும் அனைவரையும் உருக்கியது. மொத்ததில் இன்று தனலட்சுமி நன்றாகவே விளையாடினார் என்றே சொல்லலாம்.

எபிசோடின் இறுதியில் சொன்ன ஏடிகேவின் கதையும் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டது. இவரை நிராகரிக்கும் போது ரச்சிதாவிற்கு அவ்வளவு ஆவேசம் ஏனென்று தெரியவில்லை. ப்ஸர் பொத்தானையே உடைத்துச்விட்டார் என்றால் பாருங்களேன். அத்துடன் பிக் பாஸ் 9ஆம் நாள் எபிசோட் நிறைவடைந்தது.

இந்த எபிசோடில் போன வாரம் எண்ட்ரீயான புதுப் போட்டியாளர் மைனா கண்ணுக்கே தெரியவில்லை. இவரால் நிறைய டிஆர்பி கூடும், பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகரிக்கும் என நம்பி தான் அவரை அந்தத் தொலைக்காட்சி உள்ளே அனுப்பியது.

ஆனால் ஏனோ இந்த எபிசோடில் மைனா கண்ணிற்கே தெரியவில்லை. மறுபுறம் கேப்டனாகப் பொறுப்பேற்ற நம் தலைவர் ஜிபிமுத்து, தன் வேலையை மிகுந்த சிரத்தையோடு செய்து வருகிறார். எல்லோரையும் வேலை வாங்குவதும் சரி, வேலை செய்வதிலும் சரி, கலக்கி வருகிறார் நம் தலைவர். இனி வரும் நாட்களில் ஜிபி முத்துவின் கேப்டன்சி இன்னும் பிரகாஷமாகத் தெரியுமென எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா தான் என்பதை மாற்றிய தமிழ் சினிமா..!

Last Updated : Oct 19, 2022, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.