ETV Bharat / entertainment

ஜெயிலர், லியோ, விடாமுயற்சி, கங்குவா... ஜூனில் வரிசைகட்டும் பட அப்டேட்கள்...! - Kanguva movie update

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜயின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா, சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட பல பெரிய படங்கள் குறித்த அப்டேட் இந்த ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

update
ஜெயிலர்
author img

By

Published : Jun 2, 2023, 10:04 PM IST

சென்னை: 2023-ல் கடந்த ஐந்து மாதங்களில் வெளிளியான துணிவு, வாரிசு, வாத்தி, அயோத்தி, டாடா, குட் நைட், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றன. அதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் தோல்வியை தழுவின. இந்த நிலையில், வரும் நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. குறிப்பாக, இந்த ஜூன் மாதத்தில் முக்கியமான படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அப்படி எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களையும், அதன் அப்டேட்களையும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..

ஜெயிலர்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'(Jailer). விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' (Beast) படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், வருத்தத்தில் இருக்கும் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால், ஜெயிலர் படத்தை பார்த்து பார்த்து எடுத்துள்ளதாக தெரிகிறது. ரஜினியுடன் தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதுவும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, அனிருத் இசை என ஏகப்பட்ட விஷயங்கள் இதில் உள்ளதும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர்
ஜெயிலர்

லியோ: லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி இதற்கு முன் இணைந்த 'மாஸ்டர்' (Master) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி 'லியோ' (Leo) என்ற படத்தில் இணைந்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் மன்சூர் அலிகான், மிஷ்கின், த்ரிஷா, சஞ்சய் தத் என ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோகேஷ் கனகராஜ் தனது எல்சியூ-வில் இப்படத்தை எடுத்து வருகிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ வைரலான நிலையில், இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படக்குழு
லியோ படக்குழு

இந்த நிலையில் இந்த மாதம் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருவதால் அன்றைய தினம் லியோ படம் குறித்த அப்டேட் வரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது புதிய போஸ்டர் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

லியோ
லியோ

விடாமுயற்சி: நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. அதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் இப்படத்திலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதற்கு பதிலாக திடீர் என்ட்ரியாக இயக்குனர் மகிழ் திருமேனி உள்ளே வந்தார். தற்போது அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திடீர் கூட்டணி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆனால், படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று தெரியாத நிலையில், அஜித் தனது பைக் ட்ரிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். விடாமுயற்சி படத்துக்காக புனேவில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே ஓரிரு நாட்களில் விடாமுயற்சி குறித்த அப்டேட் ரசிகர்களுக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி
விடாமுயற்சி

கங்குவா: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'கங்குவா' (Kanguva). வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படம் சூர்யாவின் திரை வாழ்வில் மிகப் பெரிய பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் திஷா பதானி, யோகிபாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இப்படம் 10 மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. இதற்காக சூர்யா கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கூட‌ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படமும் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. இப்படத்தின் ப்ரொமோ வீடியோ இம்மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கங்குவா
கங்குவா

கேப்டன் மில்லர்: ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'கேப்டன் மில்லர்' (Captain Miller). இப்படமும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர்
கேப்டன் மில்லர்

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மாவீரன்' (Maaveeran 2023). இப்படத்தில் இதில் அதிதி ஷங்கர், சரிதா, தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு, தேசிய விருது பெற்ற இயக்குனர் உடன் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் டீசர் இம்மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாவீரன்
மாவீரன்

இதையும் படிங்க: Rajinikanth: புதுச்சேரியில் 'லால் சலாம்' படப்பிடிப்பு.. ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.