சென்னை: இன்று நேற்று நாளை என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். வேற்று கிரகவாசியை மையமாகக் கொண்ட அறிவியல் படமாக இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ரகுல் பீர்த்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
-
Hitting the dance floor with @arrahman sir is an experience that's truly unforgettable.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 10, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch #MaanjaNee - https://t.co/qAmoqmcOyN
An @arrahman sir musical 🛸
Singers - @arrahman & @arrameen
Penned by @arrahman sir, @Siva_Kartikeyan & @ThoughtsForNow#Ayalaan…
">Hitting the dance floor with @arrahman sir is an experience that's truly unforgettable.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 10, 2024
Watch #MaanjaNee - https://t.co/qAmoqmcOyN
An @arrahman sir musical 🛸
Singers - @arrahman & @arrameen
Penned by @arrahman sir, @Siva_Kartikeyan & @ThoughtsForNow#Ayalaan…Hitting the dance floor with @arrahman sir is an experience that's truly unforgettable.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 10, 2024
Watch #MaanjaNee - https://t.co/qAmoqmcOyN
An @arrahman sir musical 🛸
Singers - @arrahman & @arrameen
Penned by @arrahman sir, @Siva_Kartikeyan & @ThoughtsForNow#Ayalaan…
நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருந்த இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சிஜி பணிகள் முடியாததால், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நீண்ட வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை வைத்துள்ளனர். இப்படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் படம் நாளை (ஜனவரி 12) வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கேஜே ராஜேஷ் வாங்கிய ரூ.85 கோடி கடனை திருப்பித் தராமல் படத்தை வெளியிடக்கூடாது என்று கடன் கொடுத்தவர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பல்வேறு பைனான்ஸியர்களிடம் தயாரிப்பாளர் ராஜேஷ் கடன் வாங்கியுள்ளார்.
-
Our #Ayalaan is touching down tomorrow, all set and ready to take you on an adventure beyond imagination. 🛸
— KJR Studios (@kjr_studios) January 11, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Bookings open now | Landing on Pongal 👽#AyalaanFromJanuary12 🎇#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @arrahman @Ravikumar_Dir @Phantomfxstudio… pic.twitter.com/9nApHSqfta
">Our #Ayalaan is touching down tomorrow, all set and ready to take you on an adventure beyond imagination. 🛸
— KJR Studios (@kjr_studios) January 11, 2024
Bookings open now | Landing on Pongal 👽#AyalaanFromJanuary12 🎇#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @arrahman @Ravikumar_Dir @Phantomfxstudio… pic.twitter.com/9nApHSqftaOur #Ayalaan is touching down tomorrow, all set and ready to take you on an adventure beyond imagination. 🛸
— KJR Studios (@kjr_studios) January 11, 2024
Bookings open now | Landing on Pongal 👽#AyalaanFromJanuary12 🎇#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’ #Siddharth @arrahman @Ravikumar_Dir @Phantomfxstudio… pic.twitter.com/9nApHSqfta
நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்திற்குச் சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தனது தரப்பில் இருந்து ரூ.25 கோடி தரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் இந்த கடனை ஏற்க வேண்டும் அல்லது உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பைனான்ஸ்சியர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் இவ்விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டு சுமூகத்தீர்வு கிடைத்து திட்டமிட்டபடி நாளை படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் படம் வெளியாகும் போது இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.