சென்னை: தமிழ்த் திரையுலகின் பாரம்பரியம் மிக்க ஸ்டுடியோவான ஏவிஎம், சென்னை வடபழனியில் உள்ளது. தமிழ் சினிமாவின் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஸ்டுடியோவை, ஏவி.மெய்யப்ப செட்டியார் நிறுவினார். ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டன.
ஆனால், மாறி வரும் சினிமா வியாபாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் போட்டி உள்ளிட்டவற்றால், ஏவிஎம் நிறுவனம் அண்மைக்காலமாக பின்தங்கியுள்ளது. கரோனா காலத்தில் ஏவிஎம் ராஜேஸ்வரி, அகஸ்தியா உள்ளிட்ட திரையரங்குகள் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, ஏவிஎம் வளாகத்தில் ஒரு பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு, ஒரு பகுதி மருத்துவமனை என்று மாறிவிட்டது.
இந்நிலையில் படிப்பிடிப்பு தளமாகவும், டப்பிங் ஸ்டுடியோவாகவும் விளங்கிய "ஏவிஎம் கார்டன்" தற்போது திருமண மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் திருமணம் மற்றும் இதர சுப நிகழ்ச்சிகள் நடத்த 2 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஜல்லிக்கட்டு... நமது பாரம்பரியம்... நமது கலாசாரம்' - நடிகர் சசிகுமார்