நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான 'சிவாஜி' திரைப்படம் தமிழ்த்திரையுலகில் வரலாறு காணாத வசூலைக் குவித்தது.
இன்று வரை அந்த சாதனையை தமிழ்த்திரையுலக வரலாற்றில் குறிப்பிடும் வகையில் இருந்து வருகிறது. இந்நிலையில், 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், நேற்று(ஜூன் 16) அப்படத்தின் இயக்குநர் சங்கர் மற்றும் அவரின் மகள் அதிதி ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தனர்.
-
♥️Celebrating #15yearsofSivaji with Superstar @rajinikanth ♥️@avmproductions #Superstar #SuperstarRajinikanth #AVMProductions pic.twitter.com/blYijyYUQy
— Aruna Guhan (@arunaguhan_) June 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">♥️Celebrating #15yearsofSivaji with Superstar @rajinikanth ♥️@avmproductions #Superstar #SuperstarRajinikanth #AVMProductions pic.twitter.com/blYijyYUQy
— Aruna Guhan (@arunaguhan_) June 17, 2022♥️Celebrating #15yearsofSivaji with Superstar @rajinikanth ♥️@avmproductions #Superstar #SuperstarRajinikanth #AVMProductions pic.twitter.com/blYijyYUQy
— Aruna Guhan (@arunaguhan_) June 17, 2022
அதனைத் தொடர்ந்து, இன்று(ஜூன் 17) காலையில் 'சிவாஜி' படத்தின் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன், எம்.எஸ். குகன் மற்றும் அருணா குகன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரஜினி - நெல்சன் திரைப்படத்திற்கு டைட்டில் 'ஜெயிலர்'