ETV Bharat / entertainment

பொன்னியின் செல்வன் ஓவியர் மணியமின் ஓவிய கண்காட்சி…! - பொன்னியின் செல்வன் ஓவியம்

Artist Maniam art Exhibition: கல்கியின்பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற புத்தகங்களுக்கு ஓவியங்களை வரைந்த ஓவியர் மணியத்தின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் வரைந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்காக லலித் கலா அகாடமியில் வைக்கப்பட்டுள்ளது.

art exhibition of artist maniam and maniam selven in chennai
சென்னையில் கலைஞர் மணியம் மற்றும் மணியம் செல்வனின் கலைக் கண்காட்சி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 2:50 PM IST

சென்னை: ஓவியர் மணியத்தின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள லலித் கலா அகாடமியில், ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நேற்று (டிச.29) தொடங்கிய நிலையில் வரும் ஜனவரி 3ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை இசையமைப்பாளர் இளையராஜா துவக்க வைத்தார். மேலும், இவ்விழாவில் நடிகரும், ஓவியருமான சிவகுமார் மற்றும் விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஓவியம் மணியமின் ஓவியங்களை பார்வையிட்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ஓவியர் மணியம் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில், இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல்லாமல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம்.

1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர்களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை 'ஆசிரியர் கல்கி" அவர்கள் இனம் கண்டு தம்முடைய பத்திரிகையில் ஓவியராக வேலை வாய்ப்பை வழங்கினார். 1944 ஆம் ஆண்டில் மணியம், ஆசிரியர் கல்கி அவர்களோடு அஜந்தா எல்லோரா குகைக் கருவூலங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

அஜந்தா ஓவியங்கள் மணியத்தின் வண்ணச் சித்திர மடல்கள் 1944 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளியிடப்பட்டன. அவருடைய நீடித்த கலைப் பயணத்துக்கு இது முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.ஆசிரியர் கல்கி அவர்களின் புகழ்பெற்ற வரலாற்று நாவலான "சிவகாமியின் சபதம்" தொடருக்கு இடையிடையே மணியம் வரைந்த சித்திரங்கள் கல்கி வாசகர்களிடம் மிகுந்த பாராட்டைப் பெற்றுத் தந்தன.

1950 ஆம் ஆண்டில் கல்கி அவர்கள் தம்முடைய மகத்தான காவியமான 'பொன்னியின் செல்வனைக்" கல்கி இதழில் எழுதத் தொடங்கியபோது மணியம் தமக்கே உரியமுறையில் மிகுந்த திறமை வாய்ந்த ஓவியராகப் பரிணமித்திருந்தார். கல்கியின் முதன்மை ஓவியராகவும் ஆகியிருந்தார்.

கல்கியின் மற்றொரு குறிப்பிடத்தக்க நாவலான 'பார்த்திபன் கனவு' திரைப்படமாக உருவாக்கப் பட்டபோது அதன் கலை இயக்குனராகப் பணியாற்றினார். அவருடைய நுட்பமான கலை ஆற்றலைக் காட்சி அமைப்புக்களில் வெளிப்படுத்தித் தம்முடைய கலை ஆர்வத்தைத் தணித்துக் கொண்டார்.

1968 ஆம் ஆண்டில் தம்முடைய கலைத்திறனை தன்னுடைய ஒரே மகன் மணியம் செல்வன் (ம.செ) என்கிற லோகநாதனிடம் அப்படியே ஒப்படைத்துவிட்டு காலமானார். தந்தையின் ஆசிகளுடன் ஓவியர் மணியம் செல்வன் தனது ஓவிய பயணத்தை தொடங்கினார். எழுத்தாளர் சாவி தினமணி கதிரில் ஆசிரியராக இருந்த போது "ஓவியர் மணியத்தின் செல்வன், 'மணியம் செல்வன்' என்று குறிப்பிட்டு பிரகடனம் செய்தார்.

இளம் ஓவியரான ம.செ கல்லூரியில் படிக்கும் போதே கல்கி, குமுதம், தினமணிகதிர், கலைமகள், அமுதசுரபி, விகடன் போன்ற பத்திரிக்கைகள் வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்தனர். ம.செ தன்னுடை கலைப் பயணத்தில் 54 வருடங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார். தம்முடைய தந்தையார் விட்டுச் சென்றுள்ள நுட்பமான வளம் மிக்க கலைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று அடுத்து வருகிற தலைமுறைகள் பயன் பெறவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டிருக்கிறார் மணியம் செல்வன்.

ஓவியர் மணியம் அவர்களின் இந்த நூற்றாண்டில் பொதுமக்கள், மணியம் மற்றும் 'மணியம் செல்வன்' இருவரின் ஓவிய படைப்புகளை நேரில் காண இந்த ஓவியக் கண்காட்சியை அவரின் பேத்திகள் சுபாஷிணி பாலசுப்பிரமணியன், தாரிணி பாலகிருஷ்ணன் மற்றும் பேரன் சுப்பிரமணியம் லோகநாதன் இணைந்து நடத்துகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆர்.கே.செல்வமணியைக் காணவில்லை - ‘கேப்டன் பிரபாகரன்’ இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.