ETV Bharat / entertainment

'சோழர்கள் வருகிறார்கள்' பொன்னியின் செல்வன் சிங்கிள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அப்டேட்! - cholas are coming

பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தின் அப்டேட்டை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

’சோழர்கள் வருகிறார்கள்’ பொன்னியின் செல்வன் சிங்கிள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அப்டேட்!!

author img

By

Published : Jul 2, 2022, 3:22 PM IST

இயக்குநர் மணிரத்னம் டைரக்ஷனில் வெளியாகவிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத் குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் ’சோழர்கள் வருகிறார்கள்’ என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் வாரம் இப்படத்தின் பாடல் அல்லது லிரிக் வீடியோ வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம் வெற்றிக்கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: 'என் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக்கொண்டே தான் இருப்பேன்' - நடிகர் நாசர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.