ETV Bharat / entertainment

'இதயத்தைத் தொடும் ஒரு நேர்மையான கதை இது..!' - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - இயக்குநர் முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநரான N.S.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீரியட் படம் ‘1947 ஆகஸ்ட் 16’.

’இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை இது..!’ - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

author img

By

Published : May 25, 2022, 5:21 PM IST

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'A.R. Murugadoss Productions' நிறுவனம், ‘Purple Bull Entertainment’ நிறுவனத்துடன் இணைந்து வழங்க, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு “1947 ஆகஸ்ட் 16” என பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநராக மட்டுமன்றி, அவரது நிறுவனத்தின் மூலம், சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். அவர் மறக்கமுடியாத பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவரது முதல் தயாரிப்பு, Fox Star Studios உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

பல்வேறு களங்களிலான உள்ளடக்கம் மற்றும் தனித்துவமான கதைகளை உருவாக்கும் ஆர்வத்துடன் இயங்கும் இயக்குநர் முருகதாஸ் இப்போது ’Purple Bull Entertainment’ நிறுவனத்துடன் இணைந்து அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். இவர்களின் முதல் முயற்சியாக, மற்றொரு புதிய திறமையாளரான N.S.பொன்குமார் இயக்கத்தில் "1947 ஆகஸ்ட் 16" என்ற தலைப்பில் அதிரடியான வரலாற்றுப் படத்தை உருவாக்குகின்றனர். இயக்குநர் முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்தவர், N.S.பொன்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக நாயகி ரேவதியுடன், கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படம், இந்திய சுதந்திரத்தின் உச்சகட்டத்தின் போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன், பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அழகியப் பகுதிகளில் படமாக்கப்படும் இந்தப் படம், தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், “‘1947ஆகஸ்ட் 16’ படமானது, இதயத்தைத் தொடும் ஒரு நேர்மையான கதை. மனதை அசைத்துப் பார்க்கும் அற்புதமான படைப்பு.

இந்தக் கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கதையே ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை நீங்கள் ஒருமுறை பார்த்தால் என்றென்றும் அது உங்கள் மனதில் நிலைத்து இருக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: HBD Karthi : 'விருமன்' முதல் பாடல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.