ETV Bharat / entertainment

தோனி தயாரிக்கும் ’lets get married’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருவதாக அறிவிப்பு - sakshi dhoni

தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான எல்.ஜி.எம் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருவதாக தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 21, 2023, 6:42 PM IST

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ”தோனி என்டர்டெயின்மெண்ட்” என்ற நிறுவனம் தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை அவரது மனைவி சாக்ஷி தோனி நிர்வகிக்கிறார்.

முதலில் தமிழ் படத்தை தயாரிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தோனி அறிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு படத்தின் பூஜையும் நடைப்பெற்றது. இந்த படத்தில் நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

’லெட்ஸ் கெட் மேரிட்’ (lets get married) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார். இவர் தோனி நடித்த ’அதர்வா தி ஆர்ஜின்’ என்ற காமிக்ஸ் நாவலை எழுதியவர் ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'எல்.ஜி. எம்'மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக ’லெட்ஸ் கெட் மேரிட்’ உருவாகி வருகிறது.

இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் வணிகப் பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,'' எல்.ஜி.எம் திரைப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழில் ’தோனி என்டர்டெய்ன்மெண்ட்’ தயாரிக்கும் முதல் படம் இது. மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்குவோம் என நம்புகிறோம். அனைத்து தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள இந்திய பார்வையாளர்களையும் சென்றடைவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதற்கேற்ப 'எல் ஜி எம்' படம் அமைந்துள்ளது.'' என்றார்.

தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் படைப்புத்திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷூ சோப்ரா பேசுகையில், '' எல்.ஜி.எம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகம் மற்றும் படம் தயாராகும் பாணி ஆகிய இரண்டிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். திருமதி சாக்ஷி தோனியின் கருத்தாக்கத்தை ரமேஷ் தமிழ்மணி நேரடியான பொழுதுபோக்கு அம்சமுள்ள திரைக்கதையாக மாற்றினார். மேலும் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி, சரியான நேரத்தில் சிறப்பாக நிறைவடையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: இந்தியில் ரீமேக்காகும் "லவ் டுடே" - ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.