பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஸ் அலுவலராக இருந்தபோது ஒரு திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு கைகள் இல்லாமல், சர்வதேச அளவில் நீச்சலில் சாதனைப்படைத்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில், ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுப்பின், சில தொழில்நுட்பப் பிரச்னைகளால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்நிலையில், இன்று(ஜூன் 7) காலை அப்படத்தின் டீஸர் அப்படக்குழுவினரால் இணையத்தில் வெளியிடப்பட்டது. ‘சிங்கம்’ அண்ணாமலை என்று முதல் படத்திலேயே மாஸ் ஹீரோ போல் அடைமொழியுடன் புல்லட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார், அண்ணாமலை.
இப்படத்தில் நடிக்க முதலில் ஆர்வம் காட்டாமல் இருந்த அண்ணாமலை, படத்தின் கதையைக் கேட்டபின் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார். மேலும் இப்படத்தில் நடிக்க ரூ.1 மட்டுமே தான் சம்பளம் வாங்கியதாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஜூன்9ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம்!