நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனைப் படைத்துள்ளது. இதனையடுத்து, அப்படத்தின் வெற்றி விழா இன்று (ஜூன் 17) நடந்தேறியது.
அதில் பேசிய இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “கமல் சாரின் சிறு சிறு ரியாக்ஷன்களையும் இந்தப் படத்தில் வேலை செய்யும்போது ரசித்தோம். பலர் எனக்கு கமல் சார் என்ன கிஃப்ட் தருவார் எனக் கேட்டனர். அவர் எனக்கு இந்தப் படத்தைத் தந்ததே மிகப்பெரிய கிஃப்ட் தான்.
லோகேஷ் ஒரு ஜீனியஸ். அவருக்கு எந்த இடத்தில் இசை வேண்டும், எந்த இடத்தில் வேண்டாம் என்பதெல்லாம் தெளிவாகத் தெரியும். பின்னணி இசையினை சீக்கிரம் ரிலீஸ் செய்யச்சொல்லி பல பேர் கேட்கிறார்கள். அது கூடிய விரைவில் ரிலீஸ் செய்யப்படும். இப்படியொரு மாபெரும் வெற்றி தந்த ரசிகர்களுக்கு நன்றி” எனப் பேசினார்.