ETV Bharat / entertainment

சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி”!

author img

By

Published : Apr 4, 2022, 12:19 PM IST

இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்க, புதுமையான திரில்லரான “நோ எண்ட்ரி” திரைப்படம் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது.

சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி”!
சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் “நோ எண்ட்ரி”!

சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிக்கிறது, என்பதை பரபர திரைக்கதையில் திரில் பயணமாக சொல்லும் படம் தான் “நோ எண்ட்ரி”.

மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி சுற்றுலா தளம் இந்தியாவின் சிறப்புமிகு இடங்களில் ஒன்று. அதன் காடுகளையும், மலைகளையும், மலைகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் குகைகளையும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங்கில் வீட்டில் முரட்டு நாய்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட மனிதர்கள் நாய்களிடம் இருந்து தப்பிக்கும் சாகச காட்சிகள் படு அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா உண்மையில் நாய்காதலர் என்பதால் படத்தில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல், மிக எளிதாக நாய்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

படத்தில் நடிக்கும் நாய்களுக்கு 25 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. .
இதுவரையிலான தமிழ் சினிமாவில் இல்லாத புது அனுபவத்தை இந்தப்படம் தரும்.
கரோனாவிற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம் பல தடைகளை கடந்து அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

படத்தில் பல காட்சிகள் ஹாலிவுட்டுக்கு இணையாக விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிஜி செய்யப்பட்டுள்ளது. இது தமிழில் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும். நடிகை ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெயஶ்ரீ ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீதர் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அஜீஸ் இசையமைக்க, ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட அனந்தம் தொடரின் டீசர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.