Sony Liv ஓடிடி தளம் வட்டார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் தற்போது 'அனல் மேலே பனித்துளி' படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து வருகிறார் என்பதைச் சொல்கிறது.
வெற்றிமாறன் தயாரித்திருக்கக் கூடிய இந்தத் திரைப்படம் இந்த மாதம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி, Sony Liv ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆர். கெய்சர் ஆனந்த் கூறுகையில், 'Sony Liv ஓடிடி தளம் நம்முடைய வட்டாரக் கதைகளைக் கொண்டு வருவதில் மிகவும் வலுவானது. அந்த வகையில் திறமையான கதைகள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களைத் தனக்குக்கீழ் கொண்டு வருகிறது. 'அனல் மேலே பனித்துளி' திரைப்படம் Sony Liv ஓடிடி தளத்தில் வெளியாவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
எங்கள் கதையில் நம்பிக்கைக்கொண்டு, இதைத் தயாரிக்க முன் வந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. மதி தனக்கான நீதியைப் பெறுவதற்கான பயணத்தை இந்தக் கதையில் தெரியப்படுத்துகிறாள். இது போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வை மதி, தன் வாழ்வில் எதிர்கொள்ளும்போது அவள் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாள். அதை எப்படி அவள் எதிர்கொள்கிறாள் என்பதும் இந்தக் கதையில் காண்பிக்கப்படுகிறது.
இது போன்ற ஒரு வலுவான கதையில் ஆண்ட்ரியாவை கதாநாயகியாக கொண்டிருப்பது எங்களது அதிர்ஷ்டம். மதி எனும் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய முழு மனதையும் கொடுத்து நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவின் நடிப்பு மற்றும் கதையைப் பார்த்து விட்டு பார்வையாளர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” ...