சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழில் 3, வை ராஜா வை படங்களும், சினிமா வீரன் என்ற ஆவணப்படமும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய '3' படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது பாலிவுட் திரையுலகம் வரை இசையமைப்பாளராக அசத்தி வருகிறார்.
இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் "லால் சலாம்" திரைப்படம் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் 'மொய்தீன் பாய்' என்ற சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, 'GANGS' என்ற வெப் சீரிசை தொடரைத் தயாரிக்க உள்ளார். முன்னதாக ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில், 2014ஆம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தை செளந்தர்யா இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
-
My team and I are thrilled to get the blessings of “the one and only” today for our webseries 💥💥🙏🏻🙏🏻💥💥 thank you thalaivaaaa ⭐️⭐️⭐️⭐️ thank you Superstar ✨✨⚡️⚡️💫💫 thank you my dearest appa 🩵❤️🩵❤️🩵❤️ onwards & upwards 🙏🏻🙏🏻🙏🏻 gods and gurus grace !!!! @May6Ent pic.twitter.com/bp2WJOVQ40
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My team and I are thrilled to get the blessings of “the one and only” today for our webseries 💥💥🙏🏻🙏🏻💥💥 thank you thalaivaaaa ⭐️⭐️⭐️⭐️ thank you Superstar ✨✨⚡️⚡️💫💫 thank you my dearest appa 🩵❤️🩵❤️🩵❤️ onwards & upwards 🙏🏻🙏🏻🙏🏻 gods and gurus grace !!!! @May6Ent pic.twitter.com/bp2WJOVQ40
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 7, 2023My team and I are thrilled to get the blessings of “the one and only” today for our webseries 💥💥🙏🏻🙏🏻💥💥 thank you thalaivaaaa ⭐️⭐️⭐️⭐️ thank you Superstar ✨✨⚡️⚡️💫💫 thank you my dearest appa 🩵❤️🩵❤️🩵❤️ onwards & upwards 🙏🏻🙏🏻🙏🏻 gods and gurus grace !!!! @May6Ent pic.twitter.com/bp2WJOVQ40
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 7, 2023
தற்போது 'GANGS' வெப் சீரஸை அமேசான் பிரைம் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்து வருகிறார். இந்த தொடரை நோவா ஆபிரகாம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த வெப்தொடரின் தொடக்கமாகத் தனது தந்தை ரஜினிகாந்திடம், படக்குழுவினரோடு வாழ்த்து பெற்றுக் கொண்டார்.
இது குறித்த பதிவுகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நானும் எனது படக்குழுவினரும் 'ஒன் அண்ட் ஒன்லி தலைவரிடம் ஆசி பெற்றது த்ரில்லாக இருந்தது. நன்றி தலைவா, நன்றி சூப்பர் ஸ்டார், எனது அன்பான அப்பாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இவர் இயக்கிய 'கோச்சடையான்' படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், சற்று ஏமாற்றத்தை அடையச் செய்தது. வேலை இல்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமும், படத்தின் முதல் பாகம் அளவுக்கு இல்லை எனப் பேசப்பட்டது.
மேலும் இவர் அறிமுகப்படுத்திய சமூக வலைத்தள செயலியும் துவக்காமான சமயத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றது, பின் நாளடைவில் அதும் காணாமல் போனது. இந்நிலையில் தற்போது இணைய தொடர் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த இணைய தொடர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “படத்தில் தயாரிப்பாளர்கள் தான் ரியல் ஹீரோஸ்” - நடிகர் சத்யராஜ்!