ETV Bharat / entertainment

புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட அல்லு அர்ஜூன்! - ராமோஜி ஃபிலிம் சிட்டி

Allu Arjun in RFC: நடிகர் அல்லு அர்ஜூன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புஷ்பா 2 திரைப்பட படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 4:30 PM IST

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று "நாளை ஸ்பெஷல் செய்தி வெளியாகும்” என கூறியிருந்தார். அவர் கூறியதுபோல புஷ்பா 2 குறித்து அப்டேட் வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், அல்லு அர்ஜூன் தனது வீடு முதல் புஷ்பா 2 செட்டில் ஷூட்டிங் நடப்பது வரை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

புஷ்பா 2 குறித்து 3 நிமிட க்ளிம்ப்ஸ் வீடியோவாக அல்லு அர்ஜூன் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ தொடக்கத்தில் அல்லு அர்ஜூன் ”இன்று நான் உங்களை புஷ்பா செட்டிற்கு அழைத்துச் செல்ல உள்ளேன். அதற்கு முன்பாக எனது ரசிகர்களை நான் எனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல உள்ளேன்” என கூறுகிறார்.

மேலும், இந்த வீடியோவில் அல்லு அர்ஜூன் தனது காலைப்பொழுதை யோகா உடன் எவ்வாறு தொடங்குகிறார் என காட்டப்படுகிறது. பின்னர், அல்லு அர்ஜூன் தனது காரில் புஷ்பா 2 ஷூட்டிங் நடக்கும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்கிறார். ராமோஜி பிலிம் சிட்டியில் அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அந்த வீடியோவில் ”ரசிகர்கள் அன்பு மட்டுமே எனக்கு ஊக்கம் அளிக்கிறது. நான் அவர்களை பெருமைப்படுத்த விரும்புகிறேன்” என அல்லு அர்ஜூன் கூறுகிறார்.

பின்னர், புஷ்பராஜ் கதாபாத்திரத்திற்காக மேக்கப் போட்டு கொண்டு படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு உரித்தான ஸ்டைலில் தனது தோள்பட்டையை தூக்கிக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்குச் செல்கிறார். மேலும், புஷ்பா கதாபாத்திரம் மிகுந்த மன உறுதிமிக்கதாக வடிவமைக்கபட்டதுதான் தனக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது என அல்லு அர்ஜூன் அந்த வீடியோவில் கூறுகிறார்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. புஷ்பா இரண்டாம் பாகத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Jailer Piracy video leak: இணையத்தில் கசிந்த ஜெயிலர் படத்தின் ’HD Print’... படக்குழு அதிர்ச்சி!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.