ETV Bharat / entertainment

பைக் ரேஸில் இருந்து இருந்து அஜித் விலகியது ஏன்? - பயில்வான் ரங்கநாதன் கூறிய காரணம் - kollywood updates

அஜித் பைக் ரேஸராக இருக்கும் போது அவருக்கே ஸ்பான்ஸர் இல்லை அதனால் அதான் அவர் ரேஸில் இருந்து விலகிவிட்டார் என ரேஸர் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அஜித் பைக் ரேசில் ஸ்பான்சர் கிடைக்காததால் விலகிவிட்டார் - பயில்வான் ரங்கநாதன்!

author img

By

Published : Apr 5, 2023, 8:09 AM IST

சென்னை: பொன்மகள் வந்தாள், இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அகில் கதாநாயகனாக நடித்திருக்கும் 'ரேஸர்' திரைப்படம் வரும் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த லாவண்யா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜா மேடையில் பேசுகையில், ”ரேஸர் ஒரு சிறிய திரைப்படம். அதனால் சிறிய படங்கள் என்றாலே ஜெனிஷை (விநியோகஸ்தர்) தான் தேடுகின்றனர். இந்த படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது‌. சிறு பட தயாரிப்பாளர்கள் நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சினிமாவை காப்பாற்றுவதே சிறு படங்கள் தான். கல்பாத்தி அகோரம், உதயநிதி படம் என்றால் உடனே திரையரங்குகளில் இருந்து பணம் வந்துவிடும். ஆனால் இதுவரை என்னுடைய பணம் திரையரங்கில் இருந்து வரவில்லை‌” என பேசினார்.

இயக்குநர் சாட்ஸ் ராக்ஸ் மேடையில் பேசுகையில், “இந்த படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்த படத்துக்காக எங்களை நம்பி வந்தவர் தான் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. இந்த கதையைப் பற்றிக் கூறும் போது கதாநாயகி லாவண்யா நடிப்பதாகக் கூறினார். லாவண்யா நிறைய ஆதரவு கொடுத்துள்ளார்” என்றார்

பயில்வான் ரங்கநாதன் மேடையில் பேசுகையில், “சங்கங்களைக் குறை சொல்வதை தவிர்த்து விடுங்கள். திரைத்துறையைக் கற்றுக்கொண்டு படம் எடுக்க வாருங்கள். டாடா, லவ் டுடே படங்கள் போல் ரசிக்கும் படி படம் எடுத்தால் ஓடும். அஜித் பைக் ரேஸராக இருக்கும் போது அவருக்கே ஸ்பான்ஸர் கிடையாது. அவரால் ஸ்பான்ஸர் பிடிக்க முடியாமல் பைக் ரேஸில் இருந்து விலகிவிட்டார்.

படங்களுக்கு முதலில் தமிழில் பெயர் வையுங்கள்‌. இங்கு எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் சினிமா என்ற பெயரே இல்லை. படம் வெற்றியடைய வாழ்த்துகள் பயில்வான் ரங்கநாதன் பேசும் போது, சிறு பட தயாரிப்பாளர் சங்கம் அன்புச்செழியன் குறுக்கிட்டுப் பேசியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நடிகை லாவன்யா மேடையில் பேசுகையில், ”இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. என்னுடைய கதாபாத்திரம் நன்றாக வருவதற்கு ஹீரோ ஆதரவு கொடுத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது” எனக் கூறினார் நடிகர் அகில் மேடையில் பேசுகையில், “இந்த மேடை கிடைத்ததற்குக் காரணம் இயக்குநர் சதீஷ் தான். வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி” என பேசினார்

சிறு பட தயாரிப்பாளர் சங்கம் அன்புசெழியன் மேடையில் பேசுகையில், “ரேஸர் என்று கூறினாலே நடிகர் அஜித் ஞாபகம் தான் வருகிறது. இந்த சங்கம் சினிமாவுக்கு மட்டும் தான் செயல்படும். நேர்மையாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஜெனிஷ், கேபிள் சங்கர் அனைவரும் இந்த படத்துக்காக ஆதரவு கொடுத்தனர். ரேசர் படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். எங்களைத் தேடி வருபவர்கள் தான் எங்களுக்கு முதலாளி. நாங்கள் அவர்களுக்கு தொழிலாளி” என பேசினார்

இதையும் படிங்க: சோளகர் தொட்டி நாவலின் கதைத்திருட்டே ''விடுதலை'' திரைப்படம் - எழுத்தாளர் பாலமுருகன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.