ETV Bharat / entertainment

23வது திருமண நாள் கொண்டாடும் அஜித் - ஷாலினி: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! - உலக பயணம் செல்லும் அஜித்

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான அஜித்குமார் - ஷாலினி இன்று தனது 23வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 25, 2023, 1:48 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர்.

இன்றைய நிலையில் அஜித்குமார் படம் வெளியாகும் போது அது பண்டிகையை விட கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் அஜித்துக்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் ஷாலினி. ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு இவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

அதனை தொடர்ந்து சரண் இயக்கத்தில் அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்‌. அப்போது தான் இவருக்கும் அஜித்துக்கும் காதல் மலர்ந்தது. அப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அமர்க்களம் படப்பிடிப்பு சமயத்தில் ஷாலினிக்கு கத்தி பட்டு ரத்தம் வருவதை பார்த்த அஜித் துடித்துப்போய் விட்டாராம். இதேபோல் படப்பிடிப்பு தளத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை இயக்குனர் சரண் ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

பின்னர் இருவீட்டுச் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் தற்போது வரை அன்பான தம்பதியராகத் தமிழ் சினிமாவில் உள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இவர்களது திருமண நாளுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டேக் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 23வது திருமண நாளை முன்னிட்டு அஜித்தும் ஷாலினியும் அன்பாக நெருங்கி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்ட போதும் அஜித் உள்ள புகைப்படங்கள் அல்லது படம் குறித்த அப்டேட் என எந்த ஒரு செய்தி வெளி வந்தாலும் அதனை இவரது ரசிகர்கள் மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர். அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க உள்ளார். அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தனது பைக்கில் உலக பயணம் செல்லவுள்ளார்.

இதையும் படிங்க: விஷால் - ஹரி காம்போ: மீண்டும் இணைந்த ஆக்ஷன் கூட்டணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.