ETV Bharat / entertainment

'ஹிந்தி ஒரு போதும் தேசிய மொழியாகாது..!' : நடிகர்கள் கிச்சா சுதீப் - அஜய் தேவ்கன் ட்விட்டரில் மோதல்; RGVயின் மாஸ் பதில்! - ராம் கோபால் வர்மா

சில நாட்களுக்கு முன்பு, ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஹிந்தி குறித்து கூறிய கருத்திற்கு எதிராக ட்விட்டரில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்த எதிர் கருத்து சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'வட இந்திய நடிகர்கள் தென் இந்திய நடிகர்களைக் கண்டு அச்சமும் பொறாமையும் கொள்கிறார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

’ஹிந்தி ஒரு போதும் தேசிய மொழியாகாது..!’ : நடிகர்கள் கிச்சா சுதீப் - அஜய் தேவ்கன் ட்விட்டரில் மோதல்

author img

By

Published : Apr 28, 2022, 5:58 PM IST

Updated : Apr 28, 2022, 6:16 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு திரைப்பட விழாவில், 'பேன் இந்தியத் திரைப்படமான 'கேஜிஎஃப்' கன்னடத்தில் வெளியானது என்று சிலர் சொன்னார்கள், நான் அதில் சிறிய திருத்தம் செய்ய விரும்புகிறேன்.

ஹிந்தி ஒரு போதும் தேசிய மொழியாகாது. பாலிவுட் திரைப்படங்களும் பேன் இந்தியத் திரைப்படங்களை தயாரிக்கின்றன. ஆனால், அந்தத் திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும் வெற்றியைக் காண முடியவில்லை. ஆனால், நாம் இன்று எங்கும் வெற்றிகாணும் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.

  • Hello @ajaydevgn sir.. the context to why i said tat line is entirely different to the way I guess it has reached you. Probably wil emphasis on why the statement was made when I see you in person. It wasn't to hurt,Provoke or to start any debate. Why would I sir 😁 https://t.co/w1jIugFid6

    — Kichcha Sudeepa (@KicchaSudeep) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

என்றும் ஹிந்தியே தேசிய மொழி: இதற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், “சகோதரர் கிச்சா சுதீப் அவர்களே, உங்களைப் பொறுத்தவரையில் ஹிந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக உங்களின் திரைப்படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிட வேண்டும்..?

அன்றும், இன்றும், எப்போதும் நமது தாய் மொழி மற்றும் தேசிய மொழி ஹிந்தி தான். ஜன கண மன“ எனத் தெரிவித்தார்.

இதற்கு நடிகர் கிச்சா சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நீங்கள் தெரிவித்த கருத்தை ஹிந்தியில் தெரிவித்திருந்தாலும் நான் அதைப் புரிந்துகொண்டேன். அதற்குக்காரணம் நாங்கள் ஹிந்தியை மதித்து, படித்தது தான்.

இதேபோல், நான் கன்னடத்தில் ட்வீட் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்..!” என செய்தார்.

புயல் அடிக்காமல் அமைதி பிறக்காது: இதனையடுத்து இது குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா சுதீப்பிற்கு ஆதரவு தெரிவித்து அளித்த பதிலில், “ நீங்கள் நடிகர் அஜய் தேவ்கனிடம் கேட்ட கேள்வி சரியான கேள்வி. உங்களுக்குப் பாராட்டுகள்.

இந்தியா என்பது ஒரே நாடு தான் என்பதை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இதை நீங்கள்(சுதீப்) தெரிந்து கருத்து தெரிவித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால், புயல் அடிக்காமல் அமைதி பிறக்காது.

அதிலும், வடஇந்திய - தென் இந்திய விவகாரங்களில் நிச்சயம் பிறக்காது. அடிப்படையிலேயே மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், வட இந்திய நடிகர்கள் தென் இந்திய நடிகர்களைக் கண்டு அச்சம் மற்றும் பொறாமை கொள்கிறார்கள். ஏனெனில் ’கேஜிஎஃப் - 2’ என்ற கன்னடப் படம் ஹிந்தியில் பெரும் வசூலினைக் குவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதயநிதி பாராட்டிய இடிமுழக்கம்!

Last Updated : Apr 28, 2022, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.