சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், சமீப காலமாக தனது வெளிப்படையான பேச்சுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருபவர். முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது செயல்பாடுகள் காரணமாக பிரபலமானார். தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவரது மகள் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
மேலும், பிக்பாஸ்-7 நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் வனிதா விஜயகுமாரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாக, அதனை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.
-
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
அதாவது, பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கான விமர்சனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, அடையாளம் காணாத நபரால் நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று சொல்லப்படும் ஒருவரால், நான் நேற்று இரவு கடுமையாகத் தாக்கப்பட்டேன். கடவுளுக்குத் தெரியும் என்னை அடித்தது யாரென்று?
நான் எனது பிக்பாஸ்-7 நிகழ்ச்சிக்கான விமர்சனத்தை முடித்துவிட்டு, இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, என் காரில் இறங்கி என் சகோதரி சௌமியா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அங்கு இருட்டான இடத்தில், எங்கிருந்தோ ஒருவன் வந்து, ரெட் கார்டா கொடுக்குறீங்க, இதற்கு நீ சப்போர்ட் வேற பண்றியா என்று என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
என் முகத்தில் ரத்தம் வழிந்தது, அந்த வலியைத் தாங்க முடியாமல் நான் கத்தினேன். நள்ளிரவு 1 மணி என்பதால், அருகில் யாரும் இல்லை. பின்பு உடனே நான் என் சகோதரியை கீழே வருமாறு அழைத்தேன், இந்தச் சம்பவத்தை போலீசில் தெரிவிக்கும்படி என்னைச் சொன்னார்கள், ஆனால் எனக்கு இந்த நடவடிக்கையில் உடன்பாடில்லை என்று நான் அவளிடம் சொன்னேன்.
நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன். தாக்கியவரை அடையாளம் காண முடியவில்லை. என் காதுகளை ஆட்டிப் படைக்கும் பைத்தியக்காரனைப் போல சிரித்தான். திரையில் தோன்றும் உடல் நிலை சரியில்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக் கொண்டேன்.
இடையூறுகளை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது. எனது தாக்குதலை தைரியமாக பதிவிடுகிறேன். பிக்பாஸ்-7 என்பது தொலைக்காட்சியில் வரும் ஒரு கேம் ஷோ மட்டுமே, ஆனால் இதை வெறும் கேம் ஷோ என்று என்னால் கடந்து செல்ல முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-க்கு நாளை சிலை திறப்பு!