ETV Bharat / entertainment

இரட்டை குழந்தைகளின் பெயரை அறிவித்த நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சி ட்விட்! - Ulag Dhaivag N Shivan

இரட்டை குழந்தைகளுக்கு 'உயிர் ருத்ரேனில் என் சிவன்' மற்றும் 'உலக தெய்வேக் என் சிவன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக நடிகை நயன்தாரா அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 3, 2023, 12:41 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாரா தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமின்றி இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

'போடா போடி' படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர்.

பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிரமாண்டமான முறையில் விக்னேஷ் சிவன் - நயந்தாரா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்வில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, விஜய் சேதுபதி என பல திரைப் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. ஆனால் இந்த வாடகைத் தாய் விவகாரத்தில் அரசின் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று பிரச்சனை எழுந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் இதுவரை வெளிவரவில்லை. இந்த இரண்டு குழந்தைகளின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பேசத் தொடங்கினர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை நயன்தாரா தனது குழந்தைகளின் பெயரை அறிவித்துள்ளார். அதன்படி ஒரு மகனுக்கு 'உயிர் ருத்ரேனில் என் சிவன்' என்றும் மற்றொரு மகனுக்கு 'உலக தெய்வேக் என் சிவன்' என்றும் பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’தங்களது வாழ்வில் சந்தோஷமான தருணங்கள்’ என பதிவிட்டு இரட்டை குழந்தைகளின் பெயரை அறிவித்துள்ளார்

  • Dear friends ❤️
    We have named our blessings , our babies like this ❤️

    #Uyir RudroNeel N Shivan
    உயிர் ருத்ரோநீல் N சிவன்#Ulag Daiwik N Shivan
    உலக் தெய்விக் N சிவன்

    N stands for their best mother in the world #Nayanthara ❤️

    Happiest & proudest moments of life #Blessed pic.twitter.com/r4RHp0wC8f

    — VigneshShivN (@VigneshShivN) April 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனை அறிந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வாடகைத் தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் அழகிய இரட்டை குழந்தைகளுக்குத் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகளும் குவிந்து வந்தது. தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியின் இரட்டை குழந்தைகளின் பெயர்கள் மிகவும் வித்தியாசமாக இருப்பதாகவும், நலமாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Actor vijay instagram: இன்ஸ்டாவில் இணைந்த நடிகர் விஜய்.. ஒரே நாளில் இவ்வளவு பாலோவர்ஸா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.