ETV Bharat / entertainment

சர்ச்சையில் சிக்கிய சீனு ராமசாமி.. பதிலடி கொடுத்த நடிகை மனிஷா யாதவ்! - பத்திரிகையாளர் பிஸ்மி

manisha yadhav about seenu ramasamy:இயக்குநர் சீனுராமசாமி நடிகை மனிஷா யாதவ்விற்கு படப்பிடிப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்தாக சர்ச்சை கிளம்பிய நிலையில் அதனை உறுதி செய்து மனிஷா அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

manisha yadhav about seenu ramasamy
சர்ச்சையில் சிக்கிய சீனு ராமசாமி.. பதிலடி கொடுத்த நடிகை மனிஷா யாதவ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 2:52 PM IST

சென்னை: நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சைக்கு பின், இது முதல் முறையல்ல தமிழ் சினிமாவில் இதுபோன்று பல முறை நடந்துள்ளதாகவும் நாயகிகள் பலரும் பாலியல் ரீதியாக கொடுமைகளை சந்தித்து உள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த நேர்காணலில் இயக்குநர் சீனு ராமசாமி மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். அதில் அவர் இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' என்ற படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்த போது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பட விழா ஒன்றில் மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவை பதிவிட்டிருந்தார் சீனு ராமசாமி. இதனை அடுத்து தற்போது மனிஷா யாதவ் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக மௌனம் களைத்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில், “ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன். மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் பற்றி நான் சொன்னதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. என்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் எப்போதும் நான் பணியாற்ற மாட்டேன். சீனு ராமசாமி சார் நீங்கள் சொல்வது தவறு” என்று பதிவிட்டுள்ளார்.

manisha yadhav insta post
manisha yadhav insta post

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.