பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு 2020ஆம் ஆண்டிற்கான இந்திய திரையுலகின் பெரும் மதிப்புமிக்க விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
79 வயதான நடிகை ஆஷா பரேக், ‘தில் தேகே தேகோ’ , ‘கட்டி படங்’, ‘தீஸ்ரி மான்சில்’ , ‘காரவன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். 1990களில் ‘கொரா கொகாஸ்’ எனும் தொலைக்காட்சித் தொடரை இயக்கி தயாரிக்கவும் செய்திருந்தார். 2019ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஜானி மாஸ்டர்