சென்னை: நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அமலா பால் நடித்த மைனா திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகரக்ளின் வேலையில்லா பட்டதாரி, மாஸ், நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். இதனை தொடர்ந்து அமலா பாலுக்கும் இயக்குநர், ஏ.எல்.விஜய்க்கும் தலைவா படத்தின் போது காதல் ஏற்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சில ஆண்டுகள் தற்காலிகமாக நடிப்பதை நிறுத்தியிருந்த அமலா பால், ஆடை படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். இவரது நடிப்பில் கடைசியாக கடாவர் என்ற படம் ஓடிடியில் வெளியாகி இருந்தது. இவர் ஏற்கனவே ஒரு பாடகரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அமலா பால் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அமலா பாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பார்ட்டியில் அவரது நண்பர் ஜகத் தேசாய் என்பவர் அவரிடம் புரொபோஸ் செய்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது காதலை அமலா பால் ஏற்றுக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஜகத் தேசாய் வெளியிட்டுள்ள பதிவில் ”என் ஜிப்சி ராணி ஓகே சொல்லிவிட்டார். #weddingbells பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே” என்று பதிவிட்டுள்ளார். இந்த காதல் ஜோடிக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: FEMI9 என்ற சானிடரி நாப்கின் தொழிலை தொடங்கிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா!