ETV Bharat / entertainment

ஜீவி பட நாயகன் வெற்றி நடித்த 'ஆலன்' பட ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்..! - Tamil Actress

Aalan Tamil Movie: இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்துள்ள ஆலன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ஆலன் திரைப்படம்
ஆலன் திரைப்படம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 3:56 PM IST

சென்னை: நடிகர் வெற்றி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ் சினிமாவில் நடிகர் வெற்றி தனக்கென தனியிடம் பிடித்து ஜீவி, ஜீவி2, பம்பர் எனத் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில், ஆர்.சிவா தயாரித்து இயக்கும் ஆலன் என்ற படத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். ரொமான்ஸ், டிராமா திரைப்படமாக 'ஆலன்' உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்ட காலகட்டத்தில் அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான வாழ்வின் அழகைச் சொல்லும் படமாக ஆலன் உருவாகியுள்ளது.

ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறு வயதிலிருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல், ஆன்மீகம், எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இயக்குநர் ஆர்.சிவா இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.

வித்தியாசமானதாக அமைந்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆலன் திரைப்படம் கொடைக்கானல், ராமேஸ்வரம் காசி, ரிஷிகேஷ் உட்பட இந்தியாவின் பல்வேறு எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவன் - ப்ரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் LIC படப்பிடிப்பு தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.