ETV Bharat / entertainment

Asvins: 'அஸ்வின்ஸ்' படத்தில் இதுதான் மெசேஜ் - நடிகர் வசந்த் ரவி ஓபன் டாக்! - நடிகர் வசந்த் ரவி பேச்சு

ஹாரர் படத்தில் நடிக்க வேண்டாம் என்றிருந்த தன்னை, 'அஸ்வின்ஸ்' படத்தின் கதை நடிக்கத் தூண்டியதாகவும் அப்படத்தின் நாயகன் வசந்த் ரவி தெரிவித்துள்ளார். இப்படத்தில் சமூகத்திற்கு தேவையான மெசேஜ் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Actor
அஸ்வின்ஸ்
author img

By

Published : Jun 21, 2023, 4:10 PM IST

சென்னை: நடிகர் வசந்த் ரவி, தரமணி, ராக்கி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பவர். இவர் தற்போது "அஸ்வின்ஸ்" என்ற‌ சைக்காலஜிகள் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்து, பாபிநீடு பி வழங்கும் இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியை பார்த்த அனைவரும் பாராட்டி உள்ளனர். சீட் நுனியில் அமரச் செய்யும் வகையில், ஹாலிவுட் பாணி திகில் படமாக இது உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் தருண் தேஜா, "கரோனா சமயத்தில் ஒரு ஷார்ட்ஃபிலிம் நாங்கள் எடுத்திருந்தோம். அதை விமலா ராமன் பார்த்துவிட்டு தயாரிப்பு தரப்பிடம் காண்பித்தார். பின்பு நான் பாபி சாரிடம் வீடியோ காலில் கதை சொல்லி சம்மதம் வாங்கினேன். இந்த கதைக்கு எல்லாவிதமான உணர்ச்சிகளும் தரக்கூடிய ஒரு நடிகர் தேவை என நினைத்திருந்தபோது, வசந்த் ரவி உள்ளே வந்தார்.

கதை சொல்லும்போதே நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். அதேபோல, படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்த கடின உழைப்பிற்காகவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.

'அஸ்வின்ஸ்' படக்குழு
'அஸ்வின்ஸ்' படக்குழு

இதில் நடிகர் வசந்த் ரவி பேசும்போது, "இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. தரமணி, ராக்கி ஆகிய படங்களை முடித்துவிட்டு என்ன மாதிரியான படங்களில் நடிக்கலாம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. அப்படி தருண் மூலமாக என்னைத் தேடி வந்த படம்தான் 'அஸ்வின்ஸ்'. ஹாரர் படம் செய்ய வேண்டாம் என்று இருந்த என்னை, இந்த கதை கேட்டதுமே நடிக்கலாம் என்று தோன்ற வைத்தது. தரமணி, ராக்கி படங்களுக்கு ஆதரவு தந்தது போலவே, இந்தப் படத்தையும் நீங்கள் உங்கள் படமாக எடுத்துக் கொண்டு போய் மக்களிடம் சேர்த்தால் சந்தோஷப்படுவேன். ஏனெனில், படத்தின் இறுதியில் முக்கியமான மெசேஜ் உள்ளது. படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், 'ஏ' கிடைத்திருக்கிறது.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் நெகட்டிவிட்டி குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்பது தொடர்பான மெசேஜ்தான் இது. தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்துள்ள பாபி சாருக்கும் இது முக்கியமான படம். நிறைய தயாரிப்பாளர்கள் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம். விமலாராமன், சரஸ்வதி, முரளி என அனைவரும் மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளனர். படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளர் விஜய்தான். அவருக்கு நன்றி. இந்த சினிமாத் துறையில் நான் பிரம்மித்து போய் பார்க்கிற ஒருவர் என்றால் அது சக்திவேலன் சார்தான். இவருடைய பேனரில் போனால் எல்லாப் படங்களும் ஹிட். சினிமா தற்போதுள்ள சூழ்நிலையில் வருகிற சின்ன படங்கள் எல்லாவற்றையும் ஹிட்டாக்குவது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வரிசையில், 'அஸ்வின்ஸ்' படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 'அஸ்வின்ஸ்' என் படம் கிடையாது, உங்கள் படம்" என்றார்.

இதையும் படிங்க: ‘தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேச்சு’ - கமல் ரசிகர்கள் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.