ETV Bharat / entertainment

"எனது நடிப்பில் ரஜினி சாயல் வருவது இயல்பு தான்" - நடிகர் சிவகார்த்திகேயன்! - கௌதம் கார்த்திக்

நடிகர் ரஜினிகாந்த் போல் நிறைய மேடைகளில் தான் மிமிக்ரி செய்துள்ளதாகவும், அதனால் தனது நடிப்பில் அவரது சாயல் வருவது இயல்புதான் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Actor
ரஜினி
author img

By

Published : Mar 28, 2023, 4:01 PM IST

சென்னை: பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள "ஆகஸ்ட் 16, 1947" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நேற்று(மார்ச்.27) நடைபெற்றது. இதில் நடிகர் கௌதம் கார்த்திக், தயாரிப்பாளர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், "கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறேன். அதுபற்றி தற்போது எதுவும் கூறமுடியாது. நான் பல மேடைகளில் ரஜினிகாந்த் மாதிரி மிமிக்ரி செய்து வந்தவன், அதனால் எனது நடிப்பிலும் அவரது சாயல் வருவது இயல்புதான். திட்டமிட்டு செய்வதில்லை. அதில் எனக்கு மகிழ்ச்சி தான். விஜய் மாதிரி நடிப்பதாகவும் எனது ரசிகர்கள் சொல்கின்றனர்.

அயலான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடத் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளனர். கம்யூட்டர் கிராஃபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. மாவீரன் படத்தில் எனது பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எனது அடுத்த படமாக மாவீரன் வெளியாகும்.

'ஆகஸ்ட் 16, 1947' இசை வெளியீட்டு விழா
'ஆகஸ்ட் 16, 1947' இசை வெளியீட்டு விழா

இயக்குநருக்கும் எனக்கும் மனஸ்தாபம் என்று எதுவும் கிடையாது. இதை யார் சொன்னது என்று தெரியவில்லை. ஒரு புதுமையான கதைக்களம். மடோன் அஸ்வினிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். நமது குறும்படம் ஒன்று ஆஸ்கர் வாங்கியுள்ளது, அது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளது. நம்மாலும் பண்ண முடியும் என்று ஊக்கமளித்துள்ளது" என்று கூறினார்.

ஏஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பொன்குமார் 'ஆகஸ்ட் 16,1947' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், கதையின் நாயகனாக நடித்துள்ளார். ரேவதி என்பவர் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படம், சுதந்திரப்போராட்ட காலத்தில் ஆங்கிலேயேப் படைகளை எதிர்த்து களமாடிய ஒருவரது கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன்-2 டிரைலர் வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.