ETV Bharat / entertainment

'றெக்கை முளைத்தேன்' படத்தின் தலைப்பை வெளியிட்ட நடிகர் சசிகுமார்

இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் "றெக்கை முளைத்தேன்" என்னும் படத்தின் தலைப்பை நடிகர் சசிகுமார் வெளியிட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 6, 2023, 10:49 PM IST

சென்னை: சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின்‌ மூலம் இயக்குநராக அறிமுகமானவர், எஸ்.ஆர்.பிரபாகரன். அதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன், சசிகுமார் நடித்த 'கொம்பு‌ வெச்ச சிங்கம் டா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவர்‌ தற்போது முதல்முறையாக பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் படத்தை தானே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு "றெக்கை‌ முளைத்தேன்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை நண்பர்கள், காதல் என்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து வந்த இவர் இப்படத்தை க்ரைம் த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் உடன் ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல், சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா எனும் நான்கு புதுமுகங்களையும் அறிமுகம் செய்துள்ளார்.
இப்படத்திற்கு கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிடா படத்திற்கு இசை அமைத்த தீசன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா, அ.பா.ராசா ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் தலைப்பை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், மற்றும் மடோனா செபாஸ்டின், நடிகர் சூரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் கூறியதாவது, ' இப்படம் சென்னை, மூணாறு, தேக்கடி, வாகமண் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கதாநாயகனை முன்னிலைப்படுத்திப் படங்கள் எடுத்து வந்தேன். ஆனால், ஒரு எழுத்தாளராக நல்ல கருத்துள்ள கதைகளை‌, கதாநாயகர்களை மையப்படுத்திய படங்களில் சொல்ல முடியவில்லை. நல்ல கதைகளைத் தொடர்ந்து கமர்ஷியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன். அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நல்ல கதைகளையும் நிறைய புதுமுக இயக்குநர்களையும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளேன்’ இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: "உழவன் பவுண்டேசன்" மூலம் உழவர் விருதுகளை வழங்கிய நடிகர் கார்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.