ETV Bharat / entertainment

தன் குரல் சரியில்லாததால் 'ரீ-டப்பிங்கில்' இறங்கிய அண்ணாச்சி..! - தி லெஜெண்ட் திரைப்படம்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிகும் ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தில் தன் குரல் சரியாகப் பொருந்தாத இடங்களில், அண்ணாச்சி ரீ-டப்பிங் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன் குரல் சரியில்லாததால் ’ரீடப்பிங்’இல் இறங்கிய அண்ணாச்சி..!

author img

By

Published : Jun 16, 2022, 7:42 PM IST

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான, அண்ணாச்சி சரவணன் அருள் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ திரைப்படம் பிரமாண்ட செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது. பலரும் அண்ணாச்சியின் மேக்கப், டிரஸ், நடிப்பை விமர்சிக்க, நெட்டிசன்கள் மத்தியிலும் மீம் கிரியேட்டர்கள் மத்தியிலும் கன்டென்ட் ஆனார் அண்ணாச்சி.

மேலும், இந்தப்படத்தை பிரமாண்ட முறையில் ரிலீஸ் செய்ய அண்ணாச்சி திட்டமிட்டுள்ளாராம். இருப்பினும், ட்ரெய்லரில் அண்ணாச்சியின் குரல் சரியாகப் பொருந்தவில்லை எனப் பல விமர்சனங்கள் எழ, அதை சரியாக எடுத்துக்கொண்டு படத்தில் தனது குரல் சரியாகப் பொருந்தாத இடங்களில் ரீ-டப்பிங் செய்து வருகிறாராம், அண்ணாச்சி.

படத்தை மாபெரும் வெற்றியடைய வைக்க வேண்டுமென பயங்கரமாக திட்டமிட்டுவரும் அண்ணாச்சி ஒரு தியேட்டர் உரிமையாளருடன், 'தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் என் படத்தை ரிலீஸ் செய்தால் என்ன..?' எனக் கேட்டதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Thalapathy 67: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் சமந்தா..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.