சென்னை: திரைப்பட நடிகரும், இயக்குநரும், எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்றிரவு (ஜனவரி 24) காலமானார். வசூல் ராஜா எம்பிபிஎஸ், காக்கிச் சட்டை, விசாரணை, விக்ரம் வேதா, வரலாறு முக்கியம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்தவர்.
மக்கள் ஆட்சி, கண்ட நாள் முதல், கண்ணாத்தாள் உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியவர். ஆயிரம் பூக்கள் மலரட்டும், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு உள்ளிட்ட 6 படங்களை இயக்கியவர். இவருக்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் கலைச்செல்வன் தனது சமூக வலைதள பக்கத்தில், எனது தந்தை ஈ.ராமதாஸ் எம்ஜிஎம் மருத்துவமனையில் மாராடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்களுக்குகள் 24/01/2023 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கேகே நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவுக்கு பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கதாநாயகர்களாக களமிறங்கும் பரிதாபங்கள் கோபி - சுதாகர்