ETV Bharat / entertainment

'என் மகளை மனைவியிடம் இருந்து மீட்டுத்தாருங்கள்' -  நடிகர் தாடி பாலாஜி புகார்! - நடிகர் தாடி பாலாஜி

தனது மகளை தனது மனைவியிடம் இருந்து மீட்டுத்தரும்படி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்துள்ளார்.

மனைவி மீது நடிகர் தாடி பாலாஜி புகார்!
மனைவி மீது நடிகர் தாடி பாலாஜி புகார்!
author img

By

Published : Apr 1, 2022, 5:55 PM IST

Updated : Apr 1, 2022, 6:04 PM IST

சென்னை: நடிகர் தாடி பாலாஜி தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது மனைவி நித்யா மீது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பணம் கேட்டு மிரட்டும் மனைவி: அதில் , 'எனக்கும் நித்யாவிற்கும் திருமணம் ஆகி 12 வயதில் போஷிக்கா என்ற மகள் உள்ளார். எனக்கும் எனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். மகள் நித்யா, அவரது அம்மாவின் பராமரிப்பில் உள்ளார். இந்நிலையில், எனது மனைவியின் தவறான வழிகாட்டுதலால் எனது மகள் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார். மேலும், ரூ.20 லட்சம் பணம் கேட்டு நித்யா மிரட்டுகிறார்.

என் மகளுக்கு எனது மனைவி ஏற்படுத்தும் மனச்சிதைவை என்னால் நேரடியாக தடுக்க முடியவில்லை. எனவே, ஆணையம் இப்பிரச்னையில் தலையிட்டு என்னை குறித்து சமூக வலைதளங்களில் எனது மகள் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும். எனது மகளுக்கு நல்ல குழந்தை மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும். என் மகளை பணயமாக வைத்துப் பணம் பறிக்க நினைக்கும் நித்யா மீது காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'மன்மத லீலை' படத்திற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

Last Updated : Apr 1, 2022, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.