ETV Bharat / entertainment

ஒரே நாளில் சகோதரி, சகோதரனை இழந்த நடிகர் போஸ் வெங்கட்... சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்! - kollywood actor death

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி மற்றும் சகோதரர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 24, 2023, 1:12 PM IST

சென்னை: நடிகர் போஸ் வெங்கட் சின்னத்திரையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘மெட்டி ஒலி’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் சிவாஜி, தலைநகரம், கோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர்.

மேலும், தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த 2020ஆம் ஆண்டு 'கன்னிமாடம்' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக முத்திரை பதித்தார். தற்போது ம.பொ.சி என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல சின்னத்திரை நடிகை சோனியா போஸ் வெங்கட்டின் மனைவி ஆவார். மேலும், தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராகவும் போஸ் வெங்கட் பதவி வகித்து வருகிறார். நடிகர் மற்றும் இயக்குநருமான போஸ் வெங்கட் திமுக தலைமைக் கழக பேச்சாளராக பல்வேறு திமுக கட்சி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றி உள்ளார்.

இந்த நிலையில், இவரது சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில், சகோதரி வளர்மதி இறுதிச் சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் தன்னுடைய சகோதரியைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.

அப்போது திடீரென அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீதே விழுந்து அவரும் மரணம் அடைந்து உள்ளார். இந்த நிகழ்வு அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் 8 படங்கள் ரிலீஸ்! பட்டியலில் கமலும் இருக்கிறார்!

அவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகத்தினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை போஸ் வெங்கட்டிற்கு தெரிவித்து வருகின்றனர்.

கரோனா காலகட்டத்தில் இருந்து திரையுலகம் பல்வேறு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களை இழந்து வருகிறது. பிரபல பாடகர் எஸ்பிபியில் தொடங்கி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், நகைசுவை நடிகர் விவேக், புனீத் ராஜ்குமார், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், மயில்சாமி, மனோபாலா, கசன்கான் என பல்வேறு திரைக் கலைஞர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.