ETV Bharat / entertainment

"சார்பட்டா-2" - நடிகர் ஆர்யா கொடுத்த அப்டேட்! - சார்பட்டா2

சார்பட்டா-2 திரைப்படத்திற்கான கதை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

Actor
ஆர்யா
author img

By

Published : May 28, 2023, 8:37 PM IST

கோவை: விருமன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் முத்தையா "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானியும் நடித்துள்ளனர்.

அதோடு, நடிகர்கள் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. படம் வரும் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், "காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்" திரைப்பட குழுவினரான ஆர்யா மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் இன்று(மே.28) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் ஆர்யா, "படத்தில் மண், நன்றி, குடும்பம் என பல்வேறு விஷயங்களை முத்தையா, அவர் பாணியில் கூறியிருக்கிறார். இது ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம்" என்று கூறினார்.

படத்தில் வைக்கப்பட்டுள்ள 'அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு, அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு' என்ற வசனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஆர்யா, "மத நல்லிணம் இல்லாத சூழல் உருவாகி வருகிறது. இந்த சமயத்தில் இது போன்ற வசனங்கள் தேவை என நான் நினைக்கிறேன். படத்தில் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகள் இருக்கும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த படத்தில் இடம் பெறும் ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டர், பாட்டு ஆகியவை உற்சாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு கிராமத்து ஆக்சன் கதையில் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை இருந்தது.

அதனால் நான் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டு கொண்டதன் பேரில் இந்த கதை எனக்காக உருவாக்கப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை இந்த படத்துக்கு பக்கபலமாக அமைந்து உள்ளது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

பான் இந்தியா என்பது சப்ஜெக்ட்தான். ஆனால், திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் போது பல மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள். அப்போது அதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அது பான் இந்தியா படமா? என முடிவு செய்யப்படுகிறது. அடுத்து எப்ஐஆர் திரைப்படத்தின் இயக்குனருடன் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படம் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

சார்பட்டா-2 திரைப்படத்திற்கான கதை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும்" என்று கூறினார். ஐபிஎல் குறித்த கேள்விக்கு, ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிதான் வெற்றி பெறும் என நினைப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

நடிகை சித்தி இத்னானி செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கனமான, முக்கியாமன கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். சிம்பு, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தது பெருமைக்குரியது" என்று கூறினார்.

இதையும் படிங்க: நானும் ஒரு கிராமத்து பெண்; 'கழுவேத்தி மூர்க்கன்' அனுபவம் பகிரும் துஷாரா விஜயன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.