ETV Bharat / entertainment

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார் - Actor Ajiths father Subramaniam passed away

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 24, 2023, 9:48 AM IST

Updated : Mar 24, 2023, 1:10 PM IST

சென்னை: நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர், நடிகர் அஜித்குமார். எந்தவொரு பின்னணியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அவருக்கு தீவிரமான ரசிகர்கள் படை உள்ளது.
இவரும் நடிகை ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித்தின் அப்பா சுப்பிரமணியம் அம்மா மோகினி. இந்த நிலையில் அஜித்தின் அப்பா சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். கடந்த 4 நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த, நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் சென்னை கடற்கரை சாலை - ஈஞ்சம்பாக்கம் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதனால், அவரது இல்லத்தைச் சுற்றி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் சுப்ரமணியம் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. தந்தையின் இறுதிச்சடங்குகளை, அஜித்தின் அண்ணனான அனுப் குமார் செய்கிறார். இந்நிலையில் தனது தந்தையின் மறைவு குறித்து அஜித் மற்றும் அவரது சகோதர்களான அனுப் குமார் மற்றும் அனில் குமார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

''எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Actor Ajith kumar father Subramaniyam Passed away
தனது தந்தையின் மறைவு குறித்து அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் அளித்த உருக்கமான பதிவு

தங்களது தந்தை பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார். ஒரு நல்ல வாழ்க்கையினையும், எனது தாயுடன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இல்லறவாழ்க்கையிலும் அன்புடன் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதிச் சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

அனுப் குமார், அஜித் குமார், அனில்குமார்” எனது உருக்கமாகப் பதிந்துள்ளனர். அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, நடிகர் அஜித்குமாரின், தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ’ நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அஜித்குமாரின் தந்தை உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: லாக்கர்பி விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் நினைவிடத்தில் நடிகர் அஜித் அஞ்சலி!

Last Updated : Mar 24, 2023, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.