ETV Bharat / entertainment

Ajith kumar: "வாழ்க்கை ஒரு அழகான பயணம்" – சுற்றுலா நிறுவனத்தைத் துவங்கிய ஏ.கே.வின் அட்வைஸ்! - ajith movie update

மோட்டோ ரைடு குறித்து நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு தனது அனுபவம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Ajith kumar
நடிகர் அஜித் குமார்
author img

By

Published : May 22, 2023, 3:16 PM IST

சென்னை: நடிகர் அஜித் குமார் சமீபத்தில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடிக்கவிருந்தார். அந்தப் படம் முடிந்த பின்னர் தான், உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், நடிகர் அஜித் குமார் நேபாளம் வழியே பூடான் நாடுகளில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களையும் அவரது மேனேஜர் மூலம் பகிர்ந்து வந்தார். மேலும் அஜித் குமார் பயணித்த வழித்தடத்தையும் வரைபடமாகப் பகிர்ந்தார். அதில், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கொல்கத்தா, ராஜஸ்தான், புது டெல்லி என பயணித்து பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

அந்தப் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ‘விடா முயற்சி’ திரைப்படம் விரைவில் துவங்கவுள்ள காரணத்தால் அவர் சென்னைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது பயணம் குறித்து ரசிகர்களுக்கும், பைக் ரேஷர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அஜித் குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு; “இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன். அதாவது, 'வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க: Keerthy Suresh: "பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள்".. கீர்த்தி சுரேஷின் கிறங்கடிக்கும் கிளிக்ஸ்!

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப் பயணங்களை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப் பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும்.

மேலும் தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள். வாழு வாழ விடு – அஜித்குமார்” என அந்த அறிக்கையில் அஜித் குமார் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்ரீகாந்த் தேவாவின் 100-வது பட இசை வெளியீட்டு விழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.