ETV Bharat / entertainment

Vikram Movie :80’s விக்ரம் ஹீரோயின் இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..! - விக்ரம் ஹீரோயின்

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படமான ’விக்ரம்’ வெளிவரவுள்ள நிலையில், அவர் நடித்து 1986இல் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ஹீரோயின் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவொன்று பதிவிட்டுள்ளார்.

Vikram Movie :80’s விக்ரம் ஹீரோயின் இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி..!

author img

By

Published : May 15, 2022, 3:41 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று(மே 15) நடக்கிறது. இதற்கிடையே 1986ஆம் ஆண்டு வெளியான கமலின் ’விக்ரம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் லிஸி.

அவர் கமல்ஹாசனுடன் அப்போது எடுத்தப் படத்தையும் இப்போது எடுத்தப் படத்தையும் பேஸ்புக்கில் போஸ்ட் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”’விக்ரம்’ என்ற பெயரில் மறுபடியும் ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார் கமல்.

முதல் படத்தின் கதையில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமானது. ஒரிஜினல் விக்ரம் படத்தின் ஹீரோயின்களுள் நானும் ஒருத்தி! இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமளித்தாலும் எங்களுடைய, லிஸி லஷ்மி ஸ்டூடியோவில் படத்தின் குரல் பதிவு நடந்ததில் பெருமை கொள்கிறேன்.

பழைய ’விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் எவ்வளவு பெரிய அருமையான அனுபவம்? என் 17ஆவது பிறந்த நாள் கேக்கை அந்தக் குழுவுடன்தான் சேர்ந்து வெட்டினேன். இந்தியாவின் முதல் பான் இந்தியா படமான இதன் ஷூட்டிங் ராஜஸ்தானில் நடந்தது. இந்தியாவின் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவருடன் (தயாரிப்பாளரும் அவர்தான்) நடித்தேன்.

அதில் கிரேக்க கடவுளைப் போல நடிகை டிம்பிள் இருந்தார். நான் பங்கேற்ற மிகப் பெரிய படக்குழு அது. 17 வயது பள்ளிச் சிறுமியான எனக்கு முதலில் பயமாக இருந்தாலும் பிறகு உற்சாகத்தையும் மேஜிக்கையும் கொடுத்தது. என் இனிய நினைவுகளில் இதுவும் ஒன்று. கமல், லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 67 வயதில் அசால்ட் சம்பவம்.. பிளாஷ் பேக் சென்ற கமல் ரசிகர்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.