புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘கெத்துல’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(ஆக.9) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, "சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்றால் திரையுலகம் வளரும், தொழிலாளர்கள் வாழ்வார்கள். 'கெத்துல..!' கெத்தாக இருக்கிறது. இந்தக்குழு வெற்றி பெற்றால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள். தயாரிப்பாளர் மிகுந்த நல்ல குணம் படைத்தவர். நல்லதொரு ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது.
இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ்நாட்டில் ஹீரோக்களுக்கு 60 விழுக்காடு சம்பளம் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இது தீர வேண்டும். இப்படி எடுத்தால் எப்படி ஓடும். தயாரிப்பாளரை வாழ வைக்காவிட்டால் சினிமா வாழாது. இந்தப்படம் போல் சின்ன படங்கள் ஓட வேண்டும், வாழ்த்துகள்" எனப் பேசினார்.
இதில் கலந்து கொண்ட பாடலாசிரியர் சினேகன், “இந்தப்படத்தில் என் பங்களிப்பு இல்லாவிட்டாலும் நட்புக்காக அழைத்தமைக்கு நன்றி. திறமையிருந்தும் அங்கீகாரத்திற்காக முயற்சிப்பவர்களின் படம் இது.
இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் எல்லோரும் அங்கீகாரம் பெற வேண்டும். அண்ணன் ரிஷி ராஜ் உண்மையாய் சினிமாவை நேசிப்பவர். அவருக்கு சினிமா தவிர எதுவும் தெரியாது. இந்தப்படம் ஓடுவதற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
இப்படத்தில் ஸ்ரீஜீத், ஈரீன் அதிகாரி, ஷாயாஜி ஷிண்டே, ரவி காலே, வீரேந்திர சக்சேனா, சலீம் பாண்டா, குரு சந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனைத்து அம்சங்களும் நிரம்பிய ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.
இதையும் படிங்க: சிட்டி தொடர்பான படங்கள் பண்ண ஆசை - 'விருமன்'இயக்குநர் முத்தையா