ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வரும் ஆக்ஷன் படம் தான் ‘லத்தி’. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடந்தது.
68 நாட்கள் ஆக்ஷன் காட்சிக்காக மட்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னையில் நடந்த ஒரு காட்சியில், படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால், படம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இடத்தில், விஷாலின் மகனை கடத்தி விடுகிறார்கள். என்ன செய்வதென்று கலங்கி நிற்க வேண்டும். இதுதான் சார் சீன் என்று விஷாலுக்கு சொல்கிறார் டைரக்டர்.
‘எனக்கு உடனே ஞாபகத்துக்கு வந்தது. அவன் இவன் படத்துக்கு டைரக்டர் பாலா சார் சொன்ன பல காட்சிகள் மனதில் வந்தது. அந்த எமோஷன் இந்த இடத்துக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். உடனே டைரக்டரை கூப்பிட்டு,
’நான் ஒரே டேக்கில் நடித்து விடுகிறேன்.
இன்னொரு டேக்குன்னு திரும்ப திரும்ப நடிக்க கேட்காதீர்கள்’ என்று சொன்னேன். உடனே ஆறு கேமராவை வரவழைத்தார்கள். அந்த எமோஷனை வரவழைக்க மூன்று நிமிடங்கள் எடுத்து கொண்டேன். அதன் பின் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். சிறப்பாக வந்தது என்று டைரக்டர் சொன்னதும் தான் பெருமூச்சே வந்தது” என்றார் விஷால்.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிரசாத் ஸ்டுடியோவில் வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதையும் படிங்க: தேசிய விருதுகள் 2020: சிறந்த திரைக்கதை வசனம் - ‘மண்டேலா’