ETV Bharat / entertainment

மலையாள பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த ‘2018 Everyone Is A Hero’ திரைப்படம்!

மலையாளத்தில் கடந்த மே 5ஆம் தேதி வெளியான ‘2018 Everyone Is A Hero’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 14, 2023, 6:47 PM IST

மலையாளத்தில் எடுக்கப்பட்ட '2018 Everyone Is A Hero' என்ற திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூல் பெற்று, பிளாக்பஸ்டர் சாதனைப் பெற்றுள்ளது. அனைத்து இடங்களில் இருந்தும் இந்தப் படத்திற்கு வரும் அபரிவிதமான பாராட்டுகள் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இந்தப் படம் கேரளாவில் மட்டும் 9ஆவது நாளில் சுமார் 5.18 கோடி ரூபாய் வசூல் செய்து, மாலிவுட் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. உலக அளவில் முதல் 9 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூல் செய்து 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஒரு திரைப்படம் வெளியான நாளிலிருந்தே இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுவது மாலிவுட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். மேலும், பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து மலையாளத்திரையுலகிற்கு ஒரு புதிய முகத்தை அளித்து வரும் இந்தப் படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இது தான் உண்மையான ‘தி கேரளா ஸ்டோரி’ என ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஜூட் அந்தணி ஜோசப் இயக்கத்தில் மே 5ஆம் தேதி வெளியான மாலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் ‘2018 Everyone Is A Hero’ என்ற திரைப்படம் தான். இதில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகோ போபன், லால், நரேன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, தன்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஜூட் கேரளா வெள்ளத்தை இந்தப் படத்திற்குள் உருவாக்கி பார்வையாளர்களுக்கு, அந்த அற்புதமான தருணங்களை மீண்டும் வழங்கி வெற்றி பெற்றுள்ளார். கதை தத்ரூபமாக இருக்க, கலை இயக்குநர் பெரிதும் உதவியுள்ளார். அவருக்கென தனியாக ஒரு விருதே கொடுக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளார்.

காவ்யா ஃபிலிம் நிறுவனம் மற்றும் பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வேணு குன்னப்பிள்ளி, சிகே பத்மகுமார் மற்றும் ஆண்டோ ஜோசப் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மாளிகைப்புறத்திற்குப் பிறகு காவ்யா பிலிம் நிறுவனத்தின் 2ஆவது ‘பேக் டூ பேக்’ பிளாக்பஸ்டர் படம் இது தான்.

இதையும் படிங்க: 47YearsOfIlaiyaraaja:'மச்சானப் பாத்தீங்களா..' - இசையில் இளையராஜாவின் 'ராஜா'ங்கம் ஆரம்பித்த நாள் இன்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.