வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2024 மார்ச் 10ஆம் தேதி 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளை பெறும் படங்கள் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகப்படியான வாக்குகளை பெறும் படங்கள் இறுதி கட்ட நியமனங்களுக்குத் தேர்வாகும் என அறிவித்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு 2024ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி முதல் 16 வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
88 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் 10 பிரிவுகளில் தகுதி பெற்றுள்ள நிலையில், இதில் அதிகப்படியாக ஐந்து பிரிவுகளின் கீழ் நடிகர் மார்கோட் ராபியின் பிரபலமான மெட்டா காமெடி படமான ‘பார்பி' தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரைப்படங்கள் சார்பில் இயக்குநர் ஜூட் அந்தோனி ஜோசப் இயக்கத்தில், டோவினோ தாமஸ் நடித்து வெளியான மலையாளத் திரைப்படம் 2018- Everyone is a Hero, 2024 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிடுவதற்கான இறுதி ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில். பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஜூட் அந்தோனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
96வது ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகப்படியாக மார்கோட் ராபியின் மெட்டா-காமெடி படம் 'பார்பி' ஆஸ்கர் விருதுகள் 2024க்கு ஐந்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. பார்பி படத்தில் வரும் பில்லி எலிஷின் ('வாட் ஐ வாஸ் மேட் ஃபார்?'), துவா லிபா ('டான்ஸ் தி நைட்') ஆகியோரின் பாடல்கள் சிறந்த ஒலி பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மார்க் ரான்சன் மற்றும் ஆண்ட்ரூ வியாடின் ('ஐ அம் ஜஸ்ட் கென்'), ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் தேர்வாகியுள்ளது. மேலும், பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்திற்கான பரிந்துரையை பார்பி தவறவிட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லோகேஷை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறாரா இயக்குநர் நெல்சன்?