ETV Bharat / entertainment

பயத்துக்கே பயம் காட்றவன் : "15 years of Billa" - ரசிகர்கள் கொண்டாட்டம்!

இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான பில்லா திரைப்படம் இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

பயத்துக்கே பயம் காட்றவன் : "15 years of Billa" - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பயத்துக்கே பயம் காட்றவன் : "15 years of Billa" - ரசிகர்கள் கொண்டாட்டம்!
author img

By

Published : Dec 14, 2022, 8:02 PM IST

பயத்துக்கே பயம் காட்றவன் :
பயத்துக்கே பயம் காட்றவன் : "15 years of Billa" - ரசிகர்கள் கொண்டாட்டம்!

1980ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’பில்லா’. இந்தப் படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான ’டான்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில், இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க கடந்த 2007ஆம் ஆண்டு மீண்டும் ரீமேக் செய்தனர். பிரபு, நயன்தாரா, நமீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ’பில்லா’ திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாக இருந்தது. அதுவரையில் இத்தனை அழகாக ஒரு மேக்கிங்கில் எந்தப் படமும் வந்ததில்லை. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கொண்டு சென்றது. இன்று வரையிலுல் அஜித், விஷ்ணு வர்தன் கூட்டணியில் பில்லா போன்று படுஸ்டைலான படம் வந்ததில்லை. ரசிகர்களும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்று காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வெளியாவதற்கு முன் ரஜினிகாந்த், அஜித் நடித்த பில்லா படத்தை பார்த்துவிட்டு விஷ்ணுவர்தனையும் அஜித்தையும் பாராட்டினார்.

இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா பில்லா படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், ”பில்லா வெளியாகி 15 ஆண்டுகள். அஜித்துடன் பணியாற்றியது பெருமையாக இருந்தது. அஜித்-நீரவ் ஷா கூட்டணி இணைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இன்னும் நிறைய படங்களில் அஜித்துடன் இணைந்து பணியாற்ற ஆசையாக உள்ளது. ’துணிவு’ சிறப்பான படம்” என்று பதிவிட்டுள்ளார். ஹெச்‌.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ’துணிவு’ படத்திற்கும் நீரவ் ஷாதான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பேட்டைக்காளி – இது படமல்ல; வாழ்வியல்': சீமான் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.